ஸ்ரீரெட்டி லீக் செய்த அடுத்த பிரபலம்: அதிர்ச்சியில் டோலிவுட்
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகை ஸ்ரீரெட்டி தனக்கு பாலியல் தொல்லை கொடுத்த பிரபலங்களின் பெயர்களை அவ்வப்போது லீக் செய்யவுள்ளதாக சமீபத்தில் தெரிவித்திருந்தார். அதன்படி ஏற்கனவே நடிகர் ராணாவின் சகோதரர் உள்பட பலரது பெயர்களை லீக் செய்துள்ள அவர், தற்போது பிரபல தெலுங்கு திரையுலக கதாசிரியர் ஒருவர் பெயரை லீக் செய்துள்ளார். அவர்தான் கோனா வெங்கட்
கதாசிரியர் கோனா வெங்கட் தன்னிடம் அவரது கெஸ்ட் ஹவுசுக்கு வருமாறு கூறியதாகவும், அவ்வாறு வந்தால் பிரபல இயக்குனர் வி.வி.விநாயக் அவர்களை அறிமுகம் செய்து அவரது படத்தில் வாய்ப்பு பெற்று தருவதாகவும் கூறியிருந்ததாகவும், அவரை நம்பி கெஸ்ட் ஹவுஸ் சென்ற தன்னிடம் பாலியல் வல்லுறவு கொண்டதாகவும் திடுக்கிடும் தகவலை ஸ்ரீரெட்டி வெளிப்படுத்தியுள்ளார்.
இதற்கு கோனாவெங்கட் தனது சமூக வலைத்தளத்தில் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ஆதாரம் இல்லாமல் தெலுங்கு திரையுலகினர் மீது அபாண்டமாக குற்றஞ்சாட்டும் ஸ்ரீரெட்டி மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்த நிலையில் தன்னிடம் தகாத முறையில் நடந்து கொண்ட மேலும் இரண்டு பிரபலங்களின் பெயர்களை விரைவில் வெளியிடவுள்ளதாக அடுத்தடுத்து அதிர்ச்சி கொடுத்து வருகிறார் ஸ்ரீரெட்டி
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments