சென்னையில் ஸ்ரீரெட்டி: கோலிவுட் பிரபல நடிகைகள் டார்கெட்டா?

  • IndiaGlitz, [Tuesday,July 17 2018]

தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டியின் ஸ்ரீலீக்ஸ் என்ற புயல் ஓய்ந்தாலும் தற்போது அந்த புயல் கோலிவுட்டை தமிழ்லீக்ஸ் என்ற பெயரில் மையம் கொண்டுள்ளது. ஏற்கனவே இந்த புயலில் முருகதாஸ், ஸ்ரீகாந்த், ராகவா லாரன்ஸ், சுந்தர் சி, சந்தீப்கிஷான் ஆகியோர் சிக்கியுள்ள நிலையில் அவருடைய அடுத்த டார்கெட் யாராக இருக்கும் என்பதே கோலிவுட்டின் எதிர்பார்ப்பாக உள்ளது.

இந்த நிலையில் ஸ்ரீரெட்டி தற்போது சென்னையில் இருப்பதாகவும், தனக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர்கள் மீது புகார் அளிக்க போவதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் அவர் தனது முகநூலில் 'ஒருசிலர் என்னுடைய லிஸ்ட் பெரிதாக இருக்கும் என்று நினைக்கின்றனர். ஆனால் என்னுடைய லிஸ்ட் ரொம்ப சின்னதுதான் என்று கூறிவிட்டு ஒருசில முன்னணி நடிகைகளை குறிப்பிட்டு ஒருவேளை இவர்கள் தங்களுடைய லிஸ்ட் குறித்து பேச ஆரம்பித்தால் அது பெரியதாக இருக்கலாம் என்று கூறியுள்ளார்.

வழக்கம்போல் ஸ்ரீரெட்டியின் இந்த பதிவும் திரையுலகினர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை வந்துள்ள ஸ்ரீரெட்டி அடுத்த என்ன பரபரப்பை ஏற்படுத்த போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்போம்