close
Choose your channels

ஆரவ்வை மறந்துருன்னு ஓவியாகிட்டே போய் சொல்ல போறேன்! பிரபல நடிகை

Wednesday, August 2, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கிட்டத்தட்ட தமிழகம் முழுவதும் இரவு டிவி முன் உட்கார்ந்து ஒரு நிகழ்ச்சியை பார்க்கின்றார்கள் என்றால் அது பிக்பாஸ் தான் என்று சந்தேகம் இல்லாமல் சொல்லலாம். அந்த அளவுக்கு இந்த நிகழ்ச்சி மக்களை போய் சேர முழு காரணம் ஓவியா. மேலும் திரையுலகை சேர்ந்த பலரும் ஓவியாவுக்கு ரசிகர்களாகி விட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து பார்த்து இந்த நிகழ்ச்சி குறித்து அவ்வப்போது தனது கருத்தை தெரிவித்து வரும் பழம்பெரும் நடிகை ஸ்ரீப்ரியா, சற்று முன் தனது சமூகவலைத்தளத்தில் தான் பிக்பாஸ் வீட்டுக்கு செல்ல விரும்புவதாகவும், அந்த வீட்டுக்கு சென்று ஓவியாவை சந்தித்து ஆரவ்வை மறந்துவிட்டு மீதி இருக்கும் நாட்களில் ஜாலியாக இரு என்று சொல்ல விரும்புவதாகவும், அதுமட்டுமின்றி வெளியே அவருக்கு இருக்கும் ஆதரவை பற்றியும் கூற விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீப்ரியாவின் இந்த கருத்துக்கு கமெண்ட் பதிவு செய்துள்ள ஒரு ரசிகர், 'உங்களை பிக்பாஸ் வீட்டிற்குள் ஒருவேளை விடாவிட்டால் கமலிடம் அனுமதி பெற்று சனி, ஞாயிறு சென்று ஓவியாவிடம் பேசுங்கள்' என்று கூறியுள்ளார். இந்த வார சனி, ஞாயிறில் ஸ்ரீபிரியா தோன்றுவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment