சர்வதேசப் போட்டியில் இருந்து ஓய்வு பெறும் இலங்கையின் முன்னணி வீரர்!
Send us your feedback to audioarticles@vaarta.com
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மற்றும் தற்போதைய முன்னணி வீரராக இருந்து வரும் உபுல் தரங்கா சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். 36 வயதான இவர் கடந்த 2005 முதல் சர்வதேசப் போட்டிகளில் இலங்கை அணிக்காக விளையாடி வருகிறார்.
கடந்த 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை போட்டியின்போது இவர் ஒரே நேரத்தில் 2 சதம் அடித்து ரசிகர்களை அசர வைத்தார். அதோடு இலங்கை அணிக்காக இதுவரை 31 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய இவர் 3 சதத்தை விளாசி 1,754 ரன்களையும் குவித்து இருக்கிறார். 235 ஒருநாள் போட்டிகளில் விளையாடி அதில் 6,951 ரன்களை எடுத்து இருக்கிறார். மேலும் 26 டி20 போட்டிகளில் விளையாடி 407 ரன்களை எடுத்து இருக்கிறார்.
சர்வதேசப் போட்டிகளில் இலங்கை அணி சார்பாக கடந்த 15 ஆண்டுகளாக களம் இறங்கி வரும் உபுல் தரங்கா தற்போது சர்வதேசப் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாகத் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்து உள்ளார். இதையடுத்து உள்ளூர் போட்டிகளில் இவர் தொடர்ந்து விளையாடுவார் என்றும் கூறப்படுகிறது.
I have decided to retire from international cricket ?? pic.twitter.com/xTocDusW8A
— Upul Tharanga (@upultharanga44) February 23, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments