சுராங்கனி புகழ் சிலோன் மனோகர் காலமானார்
Send us your feedback to audioarticles@vaarta.com
கடந்த 70கள் மற்றும் 80களில் சினிமா ரசிகர்களாக இருந்தவர்களுக்கு 'சுராங்கனி' என்ற பாடல் தெரியாமல் இருந்திருக்க முடியாது. தமிழகம் முழுவதும் பட்டிதொட்டியெங்கும் சூப்பர் ஹிட் ஆன இந்த பாடலை பாடியவர் இலங்கையை சேர்ந்த மனோகர் என்பவர். நடிகர், பாடகர் போன்ற அவதாரங்களில் ஜொலித்த வந்த ம்னோகர் நேற்று காலமானார். அவருக்கு வயது 73
சிலோன் மனோகர் என்று அழைக்கப்பட்டு வந்த மனோகர் கடந்த 70ஆம் ஆண்டுகளில் இலங்கையில் பாடகாராக இருந்தவர். மேலும் இலங்கையில் தயாரான முதல் தமிழ்ப்படமான 'பாச நிலா' என்ற படத்தில் ஹீரோவாக முதன்முதலாக நடித்தார்.
அதன்பின்னர் தமிழ், தெலுங்கு உள்பட ஐந்து மொழிகளில் சுமார் 260 திரைப்படங்களில் நடித்துள்ள இவர் சிவாஜி, ரஜினி, கமல் உள்பட பல பிரபலங்களுடனும் நடித்துள்ளார். மாதவன், பூஜா நடித்த 'ஜேஜே' படத்தில் சிலோன் மனோகர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பிரிட்டன், ஆஸ்திரேலியா, ஐரோப்பா, கனடா, சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட பல நாடுகளில் இவர் இசைக்கச்சேரி நடத்தி உலகப்புகழ் பெற்றார்.
தனது காந்தர்வ குரலால் அனைவரையும் கவர்ந்த இவருடைய இழப்பு இசைத்துறைக்கும் நடிப்புத்துறைக்கும் பேரிழப்பு என்று கோலிவுட் பிரமுகர்கள் கூறி வருகின்றனர். அன்னாரது ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்தனை செய்வோம்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout