ரஜினி எப்போது வேண்டுமானாலும் வரலாம். இலங்கை அமைச்சர் அழைப்பு

  • IndiaGlitz, [Thursday,June 08 2017]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த ஏப்ரல் மாதம் லைகா நிறுவனம் சார்பில் புதிய வீடுகளை வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள திட்டமிட்டிருந்தார். ஆனால் தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் ஒருசிலரின் எதிர்ப்பு காரணமாக இலங்கை பயணத்தை ரத்து செய்துவிட்டார். இந்த விஷயத்தில் அரசியல் தலைவர்கள் மீது ரஜினி அதிருப்தி அடைந்ததாகவும், அவர் தனிக்கட்சி தொடங்க எடுத்திருக்கும் முடிவுக்கு இதுவும் ஒரு காரணம் என்றும் கூறப்பட்டது.

இந்த நிலையில் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து வரும் இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் ரவி கருணாநாயகே டெல்லியில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தபோது, 'ரஜினி இலங்கை வர நினைத்தால் தாராளமாக வரலாம். அவர் இலங்கையிலும் பிரபலமான நடிகர்தான். அவருக்கு அங்கு எந்த எதிர்ப்பும் இல்லை. எனவே, அவர் வருவதில் ஒரு பிரச்னையும் இல்லை' என்று கூறினார்.

ஏற்கனவே ரஜினிகாந்த் ஈழத்தமிழர்களுக்காக வெளியிட்ட அறிக்கை ஒன்றில், 'நீங்கள் என்மேல் வைத்திருக்கும் அன்பை ஊடகங்கள் மூலம் அறிந்தேன். நன்றி சொல்ல என்னிடம் வார்த்தைகள் இல்லை. நல்லதையே நினைப்போம், நல்லதே நடக்கும். நேரம் கூடி வரும்போது சந்திப்போம்' என்று கூறியிருந்தார். இந்த நிலையில் தற்போது இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் அழைப்பு விடுத்துள்ளதால் கூடிய விரைவில் ரஜினியின் இலங்கை பயணம் திட்டமிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

விஷாலின் அதிரடி திட்டத்திற்கு பிரகாஷ்ராஜ் முன்னாள் மனைவி உதவி

நடிகர் சங்க செயலாளர் மற்றும் தயாரிப்பாளர் சங்க தலைவராக இருக்கும் விஷால் அவ்வப்போது நலிந்த மற்றும் சீனியர் நடிகர், நடிகைகளுக்கு பல்வேறு உதவிகள் செய்து வரும் நிலையில் குடும்பத்தினர்களால் கைவிடப்பட்ட, ஏழ்மை நிலையில் உள்ள சீனியர் நடிகர்களுக்காக முதியோர் இல்லம் ஒன்றை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளார்...

குண்டான உடலை கேலி செய்த ரசிகர்களுக்கு பதிலடி கொடுத்த சரண்யா மோகன்

வேலாயுதம், யாரடி நீ மோகினி, அப்புக்குட்டி, வெண்ணிலா கபடிக்குழு உள்பட பல படங்களில் நடித்தவர் நடிகை சரண்யா மோகன். இவர் தனது நீண்ட நாள் நண்பர் அரவிந்த் கிருஷ்ணன் என்பவரை கடந்த 2015ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு குழந்தை சமீபத்தில் பிறந்தது....

ஜனாதிபதி தேர்தல் தேதி அறிவிப்பு

இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி அவர்களின் பதவிக்காலம் வரும் ஜூலை மாதத்துடன் முடிவடைவதால் புதிய ஜனாதிபதியை தேர்வு செய்ய நடைபெறும் தேர்தலின் தேதி இன்று மாலை அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணைய வட்டாரங்களில் இருந்து செய்தி வெளிவந்த நிலையில் சற்று முன்னர் ஜனாதிபதி தேர்தலுக்கான தேதியை தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாக அறிவித்து

லஞ்சம் கொடுத்த பணம் வீடுதேடி வரவேண்டுமா? 1100க்கு டயல் செய்யுங்கள்!

சாட்டிலைட் முதல் சகல துறைகளிலும் வளர்ச்சி அடைந்து வரும் இந்தியா, லஞ்சத்தை ஒழிப்பதில் மட்டும் மிகவும் பின் தங்கியுள்ளது. சமீபத்தில் எடுக்கப்பட்ட ஒரு சர்வேயில் ஆசிய அளவில் அதிக லஞ்சம், ஊழல் நடைபெறுவது இந்தியாவில்தான் என்பது தெரிய வந்துள்ளது...

'பாகுபலி 2' படம் பார்க்க 10 ரூபாய் கூட செலவு செய்ய மாட்டேன். தேசிய விருது இயக்குனர்

பிரபல இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலியின் 'பாகுபலி 2' திரைப்படம் கடந்த ஏப்ரல் மாதம் வெளியாகி இந்தியாவில் மட்டுமின்றி உலக அளவில் ஹிட் ஆகியது. இந்த படத்தின் வசூல் ரூ.1700 கோடியை நெருங்கி புதிய சாதனை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த படத்தை பெரும்பாலான திரையுலக பிரமுகர்கள் பாராட்டி வருகின்றனர்...