காட்டு யானைகள் குப்பை மேட்டைக் கிளறி உணவுத்தேடும் பரிதாபம்… பதறவைக்கும் வீடியோ!!!

  • IndiaGlitz, [Friday,November 27 2020]

 

இலங்கை பகுதியில் சமீபகாலமாக காடு அழிப்பு நடவடிக்கைகள் அதிகரித்து இருப்பதாகக் கூறப்படுகிறது. இதனால் காட்டு யானைகள் தங்களது வாழிடங்களை இழந்து நகர்ப்புறங்களில் உணவுத்தேடும் பரிதாப நிலை இலங்கையில் அரங்கேறி வருகிறது. சமீபத்தில் ஒரு காட்டு யானைக் கூட்டம் நகர்ப்புறம் அருகே கொட்டி வைத்திருந்த குப்பை கூளங்களுக்கு நடுவே உணவுக் கிடைக்குமா எனத் தேடிய வீடியோ காட்சி பார்ப்போரை பதற வைத்திருக்கிறது.

நகர்ப்புறங்களில் கொட்டப்படும் பிளாஸ்டிக் பைகள், கண்ணாடி உடைசல்கள், அழுகிப்போன பொருட்களை உண்ணும் காட்டு யானைகளுக்கு விரைவில் உடல்நலக் கோளாறு ஏற்பட்டு இதனால் உயிரிழப்பும் ஏற்படுவதாகக் கூறப்படுகிறது. கடந்த ஆண்டு மட்டும் இதுபோன்ற குறைபாட்டினால் 361 யானைகள் இறந்துள்ளதாக அதிர்ச்சி தகவலும் வெளியிடப்பட்டு இருக்கிறது.

மனித நாகரிக வளர்ச்சியில் இயற்கையின் சூழலை தொடர்ந்து மாற்றி வருகிறோம். இப்படி செய்யும் ஒவ்வொரு செயலும் மற்ற விலங்கினங்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தி விடுகின்றன. அப்படித்தான் காட்டு யானைகள் தங்களது வாழிடங்களையும் உணவையும் இழந்து பன்றிகளைப் போல குப்பையை கிளறும் அவலம் அரங்கேறி இருக்கிறது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சமூக வலைத்தளத்தில் வெளியிடப்பட்ட இந்த வீடியோ கடும் வைரலாகி விமர்சனத்தை ஏற்படுத்தி வருகிறது.