எங்க ஊருக்கு வாங்க.. 'லியோ' ஆடியோ விழாவை நடத்தலாம்.. அண்டை மாநில பிரபலம் அழைப்பு?

  • IndiaGlitz, [Wednesday,September 27 2023]

சென்னையில் நடைபெற இருந்த ‘லியோ’ திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் கேரளாவில் ‘லியோ’ ஆடியோ விழா நடத்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.

செப்டம்பர் 30ஆம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் ‘லியோ’ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நடைபெற திட்டமிடப்பட்டிருந்த நிலையில் திடீரென இந்த விழா ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு பக்கம் அரசியல் அழுத்தம் என்று கூறப்பட்டாலும் இன்னொரு பக்கம் போலி டிக்கெட்டுகள் அதிகமாக விற்பனையானது தான் இந்த விழா ரத்து செய்யப்பட்டதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் ‘லியோ’ திரைப்படத்தின் கேரளா ரிலீஸ் உரிமையை பெற்ற ஸ்ரீ கோகுலம் பிக்சர்ஸ் நிறுவனத்தின் கோபாலன், கேரளாவில் ‘லியோ’ திரைப்படத்தின் ஆடியோ விழாவை நடத்த அழைப்பு விடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது

இதற்காக அவர் தளபதி விஜய் உள்பட ‘லியோ’ குழுவினர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளதாகவும் தெரிகிறது. இதற்கு ‘லியோ’ படக்குழுவினர் ஒப்புக் கொள்வார்களா? கேரளாவில் ஆடியோ வெளியீட்டு விழா நடக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.