வைரலாகும் ஸ்ரீதிவ்யா தங்கையின் நெருக்கமான நடன வீடியோ

  • IndiaGlitz, [Wednesday,July 15 2020]

தமிழ் திரை உலகின் திறமையான நடிகைகளில் ஒருவர் ஸ்ரீதிவ்யா. சிவகார்த்திகேயன் நடித்த ’வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ என்ற திரைப்படத்தில் தமிழில் அறிமுகமாகி, அதன் பின்னர் வெள்ளைக்காரதுரை, காக்கி சட்டை, ஈட்டி, ரெமோ, பென்சில், காஷ்மோரா உள்பட பல திரைப்படங்களில் நடித்தார். இந்த நிலையில் தற்போது அதர்வாவுடன் ’ஒத்தைக்கு ஒத்த’ என்ற திரைப்படத்தில் ஸ்ரீதிவ்யா நடித்துக் கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது

திரை உலகில் நடிகைகளைப் பொறுத்தவரை கவர்ச்சியில் இறங்கி அடித்து வரும் நிலையில் ஸ்ரீதிவ்யா கவர்ச்சிக்கு இடம் கொடுக்காமல் திறமையான நடிப்பின் மூலமே வாய்ப்புகளைப் பெற்று வந்ததால் அவருக்கான வாய்ப்பு மிகவும் குறைவாகவே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் ஸ்ரீதிவ்யா ஒரு பக்கம் குடும்ப பாங்கான கேரக்டர்களில் மட்டுமே நடித்து வரும் நிலையில் அவரது தங்கை ஸ்ரீரம்யா, ஆண் நண்பருடன் நெருக்கமாக நடனம் ஆடும் வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் தற்போது வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை ஒருசில ஆண்டுகளுக்கு முன் ஸ்ரீரம்யா தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்தார். ஆனால் இந்த வீடியோ தற்போதுதான் இணையத்தில் திடீரென வைரலாகி வருகிறது என்பதும், ஆண் நண்பருடன் நெருக்கமாக, வித்தியாசமான ஸ்டெப்களில் ஸ்ரீரம்யா நடனமாடும் இந்த வீடியோவை நெட்டிசன்கள் தொடர்ந்து வைரலாகி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஸ்ரீதிவ்யாவின் தங்கை ஸ்ரீரம்யா ’யமுனா’ என்ற தமிழ் படத்திலும், ஒரு சில தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது