கர்ப்பிணி மனைவியின் வயிற்றில் நாட்களை எண்ணும் கணவர்.. ஸ்ரீதேவி அசோக்கின் க்யூட் வீடியோ..!

  • IndiaGlitz, [Thursday,May 23 2024]

சீரியல் நடிகை ஸ்ரீதேவி அசோக் மீண்டும் கர்ப்பமாக இருக்கும் நிலையில் அவரது கர்ப்பமான வயிற்றில் உள்ள டி-ஷர்ட்டில் கணவர் நாட்களை என்னும் வகையில் குறியீடு செய்யும் வீடியோ அவரது இன்ஸ்டாகிராமில் வைரல் ஆகி வருகின்றன.

ராஜா ராணி’ ’இளவரசி’ ’கஸ்தூரி’ ’தங்கம்’ உள்பட பல சீரியல்களில் நடித்தவர் ஸ்ரீதேவி அசோக். இவர் தனுஷ் நடித்த ’புதுக்கோட்டையில் இருந்து சரவணன்’ உள்பட ஒரு சில திரைப்படங்களில் நடித்துள்ள நிலையில் ஸ்ரீதேவி அசோக் கடந்த 2019ஆம் ஆண்டு அசோக் என்ற போட்டோகிராபரை திருமணம் செய்து கொண்டார்.

இந்த தம்பதிக்கு ஏற்கனவே ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில் சமீபத்தில் ஸ்ரீதேவி அசோக் மீண்டும் கர்ப்பமானார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் அவருக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடந்த நிலையில் அதுகுறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்த நிலையில் ஸ்ரீதேவி அசோக் தற்போது நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் நிலையில் அவர் அணிந்திருக்கும் டீசர்ட்டில் எண்களை வரைந்து அதில் எத்தனை நாள் கர்ப்பம் என்பதை குறியீடு செய்யும் வகையிலான வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இந்த வீடியோவுக்கு ஏராளமான லைக்ஸ் மற்றும் கமெண்ட் குவிந்து வரும் நிலையில் இந்த டீசர்ட்டை தயார் செய்த அவரது கணவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.