யோகிபாபுவை பாராட்டிய ஐபிஎல் வீரர்: உதவி செய்த யார்க்கர் மன்னன் நடராஜன்!

  • IndiaGlitz, [Monday,April 12 2021]

பிரபல காமெடி நடிகர் யோகி பாபு நடித்த ’மண்டேலா’ திரைப்படம் சமீபத்தில் ஓடிடியில் வெளியானதை அடுத்து இந்த படத்தை பார்த்த ஐபிஎல் வீரர் ஒருவர் யோகிபாபுவுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். வீடியோகால் மூலம் அவர் பாராட்டு தெரிவிக்க நம்மூர் நடராஜன் உதவி செய்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஓடிடி தளத்தில் யோகி பாபு நடித்த ’மண்டேலா’ திரைப்படம் வெளியானது. மிகச்சரியாக தேர்தல் நேரத்தில் வெளிவந்த படம் என்பதால் மிகப்பெரிய வரவேற்பு இந்த படத்திற்கு கிடைத்தது.

இந்த நிலையில் இந்த படத்தை பார்த்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை சேர்ந்த ஸ்ரீவத்ஸ கோஸ்வாமி என்பவர் பாராட்டி உள்ளார். அவர் தனது சக வீரர் நடராஜனிடம் இது குறித்து தெரிவித்துள்ளார். உடனே நடராஜன் ’யோகி பாபு எனது நண்பர்தான் உங்களுடன் அவரை பேச வைக்கிறேன்’ என கூறி தனது மொபைல் போனில் யோகி பாபுவுக்கு வீடியோ கால் செய்து, யோகி பாபு லைனில் வந்தவுடன் ஸ்ரீவத்ஸ கோஸ்சுவாமியை யோகி பாபு பேசுவதற்கு உதவினார். யோகிபாபுவுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்த ஸ்ரீவத்ஸ கோஸ்சுவாமி, அவருடன் பேச வைத்த நடராஜனுக்கும் தனது நன்றியை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தனது டுவிட்டரில் ஸ்ரீவத்ஸ கோஸ்சுவாமி கூறியிருப்பதாவது: சில நாட்களுக்கு முன் நெட்ஃபிளிக்ஸில் 'மண்டேலா' திரைப்படம் பார்த்தேன். நடிகர்கள் நடிப்பைப் பார்த்து மிரண்டுவிட்டேன். குறிப்பாக யோகி பாபுவின் நடிப்பு. என்ன ஒரு நடிகர், என்ன ஒரு கதை. அவர் நடராஜனின் நண்பர் என்பது தெரிந்தது. வீடியோ கால் மூலம் என்னை யோகி பாபுவிடம் பேசவைத்தார்’ என்று கூறியுள்ளார்.

More News

சென்னை அருகே மூதாட்டி, தண்ணீர் என நினைத்து ஆசிட்டை குடித்த பரிதாபம்!

சென்னை அடுத்த திருமுல்லைவாயில் பகுதியில் வசித்து வரும் 60 வயது மூதாட்டி ஒருவர் தண்ணீர் என நினைத்து பாட்டிலில் இரூந்த ஆசிட்டை எடுத்துக் குடித்துள்ளார்.

ஷிவானியை அழகாக மாற்றிய ரம்யா பாண்டியன்: இவருக்கு இவ்வளவு திறமையா?

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் புகழ்பெற்ற தொலைக்காட்சி நடிகை ஷிவானி அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிளாமர் புகைப்படங்களை பதிவு செய்து வரும் நிலையில் சற்று முன் அவருடைய

சாத்தான்குளப் படுகொலைகளை நினைவுபடுத்துகிறார்களா? கோவை சம்பத்திற்கு கமல் கேள்வி!

கோவை உணவகத்தில் நடந்த காவல்துறை அதிகாரி ஒருவரின் தாக்குதலுக்கு சாத்தான்குளம் சம்பவத்தை நினைவு படுத்துவதாக கமல்ஹாசன் தனது டுவிட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார் 

கொரோனா பாதிப்புடன் தியேட்டருக்கு சென்றாரா பிரபல தமிழ் நடிகை? அவரே அளித்த விளக்கம்

தமிழ் திரையுலகின் பிரபல நடிகை ஒருவர் கொரனோ பாதிப்புடன் திரையரங்கு சென்று அவர் நடித்த படம் பார்த்ததாக புகைப்படங்களுடன் கூடிய செய்தி வெளியானதையடுத்து பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

நாட்டுப்புற கலைஞர்களுக்கு நிவாரணம்...! தமிழக அரசாணை வெளியீடு...!

நாட்டுப்புற கலைஞர்களுக்கு சிறப்பு நிவாரணம் இரண்டாயிரத்தை வழங்க தமிழக அரசு