கேமிராமேனிடம் கோபமாக நடந்து கொண்ட காவ்யா மாறன்.. என்ன நடந்தது பஞ்சாப்-ஐதராபாத் போட்டியில்?

  • IndiaGlitz, [Monday,April 10 2023]

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் போட்டி தற்போது நடைபெற்று வரும் நிலையில் நேற்று 14 வது போட்டி பஞ்சாப் மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. இந்த போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தனது முதல் வெற்றியை பதிவு செய்து புள்ளி பட்டியலில் இடம்பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்றைய போட்டியில் பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்த நிலையில் அந்த அணியின் விக்கெட்டுகள் மளமள என சரிந்து கொண்டிருந்தது. ஆனால் கேப்டன் ஷிகர் தவான் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 99 ரன்கள் அடித்தார் என்பதும் இதனால் அந்த அணியின் ஸ்கோர் 143 என்ற வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் 144 ரன்கள் என்ற இலக்கை நோக்கி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி விளையாடிக் கொண்டிருந்த நிலையில் ராகுல் திருபாத்தி அபாரமாக விளையாடி 74 ரன்கள் அடித்து அந்த அணிக்கு வெற்றியைத் தேடித் தந்தார்.

இந்த நிலையில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் அனைத்து போட்டிகளையும் நேரில் பார்த்து வரும் அந்த அணியின் உரிமையாளர் காவ்யா மாறன் நேற்றைய போட்டியில் கலந்து கொண்டு தனது அணியினர்களுக்கு ஊக்கமளித்தார். அப்போது கேமராமேன் அடிக்கடி காவ்யா மாறனை ஃபோகஸ் செய்து கொண்டிருந்த நிலையில் ஒரு கட்டத்தில் காவ்யா மாறன் ஆத்திரம் அடைந்து கேமராவை திருப்புமாறு கூறினார். இது குறித்த வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

More News

இது டப்பிங்கா? இல்ல ஆக்சன் காட்சியின் படப்பிடிப்பா? அருண் விஜய்யின் ஆக்ரோஷமான வீடியோ..!

அருண் விஜய் நடித்து முடித்துள்ள 'மிஷன் 1' என்ற திரைப்படத்தின் டப்பிங் பணிகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில் அருண் விஜய் டப்பிங் செய்யும் போது எடுக்கப்பட்ட வீடியோ இணையதளங்களில் வைரல் ஆகி

அடுத்த லெவலுக்கு சென்ற அமீர் - பாவனி .. வைரல் புகைப்படங்கள்..!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் காதலர்களாக மாறிய அமீர் மற்றும் பாவனி தற்போது இருவரும் ஒரே திரைப்படத்தில் இணைந்து நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளி மாணவிகளுக்காக “அயலி” இணையத்தொடர்: அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேரில் வாழ்த்து 

பள்ளி மாணவிகளுக்காக “அயலி” இணையத் தொடர்  சிறப்பு திரையிடப்பட்ட நிலையில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தார்.

மீண்டும் இணையும் தனுஷ்-மாரி செல்வராஜ்: வேற லெவல் அறிவிப்பு..!

தனுஷ் நடிப்பில் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான 'கர்ணன்' என்ற திரைப்படம் கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது இருவரும் மீண்டும் இணையும்

திருமண கோலத்தில் திடீரென தோன்றிய பிக்பாஸ் கேப்ரில்லா.. வேற லெவல் டுவிஸ்ட் என அறிவிப்பு..!

பிக் பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளரும் டிவி சீரியல் நடிகையுமான கேப்ரில்லா திடீரென திருமண கோலத்தில் இருக்கும் புகைப்படங்களை பதிவு செய்து வேற லெவல் டுவிஸ்ட் என்றும் கூறியிருப்பது ரசிகர்கள் மத்தியில்