ஹன்சிகாவின் அடுத்த படத்தில் வில்லனாகும் பிரபல கிரிக்கெட் வீரர்!

  • IndiaGlitz, [Friday,October 11 2019]

நடிகை ஹன்சிகா தமிழ் சினிமாவில் கடந்த சில ஆண்டுகளாக தத்தளித்து வந்த போதிலும் தற்போது அவர் ’மஹா’ உட்பட ஒரு சில படங்களில் நடித்து வருகிறார். இந்த படங்கள் வெளியாகும்போது அவரது மார்க்கெட் மீண்டும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் மேலும் ஒரு புதிய படத்தில் நடிக்க ஹன்சிகா ஒப்பந்தம் ஆகியுள்ளார். யோகி பாபு நடித்த ’தர்ம பிரபு’ படத்தை தயாரித்த ஸ்ரீவாரி பிலிம்ஸ் தயாரிக்கும் அடுத்த த்ரில் படத்தில் ஹன்சிகா நடிக்கவுள்ளார்.

நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள இந்த படத்தில் ஹன்சிகா இதுவரை நடித்திராத ஒரு வித்தியாசமான கேரக்டரில் நடிக்க உள்ளார் என்றும், இந்த படத்தில் பிரபல கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் வில்லன் வேடத்தில் நடிக்கவிருப்பதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.

இந்த படத்தை இயக்குனர் ஹரிஹரிஸ் இயக்க உள்ளார். திகில் மற்றும் காமெடி கலந்த இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருப்பதாகவும் இந்த படம் வரும் கோடை விடுமுறையில் வெளியிட திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் ஏற்கனவே இந்தி, மலையாலம் மற்றும் கன்னட மொழி படங்களில் நடித்திருந்தாலும் அவர் நடிக்கும் முதல் தமிழ் படம் என்பதால் இந்த படத்திற்கு எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

More News

கே.பாலசந்தர் படத்தில் பணிபுரிந்த சாக்சோபோன் கலைஞர் காலமானார்

கே.பாலசந்தர் இயக்கத்தில் பிரபு, ரமேஷ் அரவிந்த், மீனாட்சி சேஷாத்திரி, பிரகாஷ்ராஜ் நடித்த 'டூயட்' என்ற படம் கடந்த 1994ஆம் ஆண்டு வெளியானது. இந்த படத்தில் பிரபு ஒரு சாக்சோபோன் கலைஞராக நடித்திருப்பார்.

இயக்குனர் சங்கத்திற்கு சூர்யா செய்த சிறப்புக்குரிய உதவி!

சூர்யா நடித்த 'காப்பான்' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து அந்த படத்தில் பணிபுரிந்த அனைவருக்கும் நடிகர் சூர்யா தங்கக்காசுகள் வழங்கி கெளரவித்தார் என்பது தெரிந்ததே

ரஜினிகாந்த் குறித்து பரவி வரும் வதந்திக்கு ஒரு விளக்கம்

சீன அதிபர் ஜீ ஜின்பிங் மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆகிய இருவரும் நாளை சென்னை அருகே உள்ள மாமல்லபுரத்திற்கு வருகை தர உள்ளனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சியால் வாய்ப்புகளை இழந்து வரும் மீராமிதுன்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டால் உலகம் முழுவதும் புகழ் பெறலாம், கோலிவுட் வாய்ப்புகள் குவியும், கோடிக்கணக்கில் சம்பாதிக்கலாம் என பிக்பாஸில் கலந்து கொண்டவர்கள் கூறுவதுண்டு.

அருண்விஜய்யின் அடுத்த படத்தின் இசையமைப்பாளர் அறிவிப்பு

'என்னை அறிந்தால்', செக்க சிவந்த வானம்' தடம் என தொடர் வெற்றிப்படங்களை கொடுத்து வரும் அருண்விஜய், தற்போது 'அக்னி சிறகுகள்', பாக்ஸர்'மற்றும் மாபியா போன்ற படங்களில் நடித்து வருகிறார்.