அனிருத் ஜோடியாகிறாரா ஸ்ரீலீலா? விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு..!

  • IndiaGlitz, [Thursday,September 26 2024]

தமிழில் பிஸியான இசையமைப்பாளராக இருக்கும் அனிருத் ஜோடியாக ஸ்ரீலீலா நடிக்க இருப்பதாகவும், இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, பாலிவுட் என பான் இந்திய இசையமைப்பாளராக மாறி இருக்கும் அனிருத் தற்போது ’தேவாரா’, ’வேட்டையன்’, ’விடாமுயற்சி’, ’இந்தியன் 3’, ’கூலி’, ’லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’, ’SK 23’ உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்து வருகிறார். தளபதி விஜய் நடிக்கும் ’தளபதி 69’ படத்திற்கும் இவர்தான் இசையமைப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் திரையுலகில் பிஸியான நிலையிலும், வெளிநாட்டில் இசை நிகழ்ச்சி உட்பட சில நிகழ்ச்சிகளை நடத்தி வரும் அனிருத், ஒரு ஆல்பம் பாடலை கம்போஸ் செய்துள்ளதாகவும், இந்த ஆல்பத்தில் அவரே நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த ஆல்பத்தில் அனிருத்துடன் இணைந்து பிரபல தெலுங்கு நடிகை ஸ்ரீலீலா நடனமாட இருப்பதாகவும், இதற்கான பேச்சுவார்த்தை முடிந்து விட்டதாகவும் விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

ஏற்கனவே தமிழில் சில படங்களில் ஸ்ரீலீலா நடிப்பதாக இருந்த நிலையில், இன்னும் அவர் ஒரு தமிழ் படத்தில் கூட நடிக்கவில்லை. இந்த நிலையில், அனிருத்துடன் இணைந்து தமிழ் ஆல்பத்தில் நடிக்க இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

More News

சியான் விக்ரமின் 'வீரதீர சூரன்' படத்தின் ரிலீஸ் தேதி இதுவா? பெரிய படங்களுடன் மோதல்?

பிரபல நடிகர் விக்ரம் நடித்து வரும் 'வீர தீர சூரன்' படத்தின் படப்பிடிப்பு ஒருபக்கம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இந்த படம் டிசம்பர் மாதம் கிறிஸ்துமஸ்

10 வயது இளையவரான கணவரை பிரியும் 'இந்தியன்' பட நடிகை.. முடிவுக்கு வரும் திருமண உறவு..!

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவான "இந்தியன்" படத்தில் நடித்த நடிகை, தன்னைவிட 10 வயது குறைவான ஒருவரை திருமணம் செய்து கொண்ட நிலையில்,

சதீஷின் 'சட்டம் என் கையில்' படம் பார்த்த 'கோட்' பிரபலம்.. என்ன சொன்னார் தெரியுமா?

தமிழ் திரை உலகில் முன்னணி காமெடி நடிகராக இருந்து, தற்போது ஹீரோவாக நடித்து வரும் நடிகர் சதீஷ் நடிப்பில் உருவான 'சட்டம் என் கையில்' என்ற திரைப்படம் நாளை திரையரங்குகளில்

'வேட்டையன்' படத்தில் அபிராமி கேரக்டர்.. சூப்பர் வீடியோ வெளியிட்ட லைகா..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'வேட்டையன்' திரைப்படம் அக்டோபர் 10ஆம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.

கணவருடன் சென்று ராகுல் காந்தியை சந்தித்த மேகா ஆகாஷ்.. என்ன காரணம்?

காங்கிரஸ் கட்சியின் எம்.பி. மற்றும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் திரு. ராகுல் காந்தியை சமீபத்தில் திருமணம் செய்து கொண்ட நடிகை மேகா ஆகாஷ், தனது கணவருடன் சென்று