துல்கார் சல்மானுடன் ஜான்வி நடிப்பது உண்மையா? ஸ்ரீதேவி விளக்கம்

  • IndiaGlitz, [Wednesday,September 23 2015]

இளையதளபதி விஜய் நடித்த 'புலி' திரைப்படத்தில் விஜய்க்கு இணையாக பேசப்பட்டு வருபவர் நடிகை ஸ்ரீதேவி. இந்த படத்தின் ரிலீஸை ஸ்ரீதேவி மிகவும் எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையில், ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்விகபூர், மலையாள நடிகர் துல்கார் சல்மானுக்கு ஜோடியாக நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்தன.

இதுகுறித்து ஸ்ரீதேவி தற்போது விளக்கம் அளித்துள்ளார். 'ஜான்வி தற்போதுதான் பட்டப்படிப்பை முடித்துள்ளார். அவருடைய கவனம் தற்போது மேல்படிப்பில் மட்டுமே உள்ளது. இதுவரை அவர் எந்த திரைப்படத்திலும் நடிக்க ஒப்பந்தம் செய்யப்படவில்லை. நடிகை ஆவதற்குரிய நேரம் இன்னும் கனியவில்லை என்றுதான் நான் நினைக்கின்றேன். எனவே ஜான்வி குறித்து வெளிவந்த செய்தி அனைத்தும் உண்மைக்கு புறம்பானவை' என்று கூறியுள்ளார்.

பாகுபலி' படத்தின் கதாசிரியர் கே.வி.விஜயேந்திர பிரசாத் இயக்கும் படம் ஒன்றில்தான் ஜான்வி நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்தன. தற்போது ஸ்ரீதேவியின் விளக்கத்தை அடுத்து அது வதந்தி என்பது உறுதியாகியுள்ளது.

More News

கோலிவுட் ஹீரோயிஸத்தை உடைத்ததா 'மாயா'?

கோலிவுட் திரையுலகம் என்றாலே ஹீரோயிஸம் அதிகம் உள்ள துறை என்றுதான் கூறப்படுவதுண்டு...

விரைவில் 'ராஜதந்திரம்' இரண்டாம் பாகம் வெளியீடு

கடந்த மார்ச் மாதம் வெளியாகி வெற்றி படங்களில் ஒன்றாக விளங்கிய திரைப்படம் 'ராஜதந்திரம்'. கவுதம் மேனன் இயக்கிய 'நடுநிசி நாய்கள்' ...

கபாலி-கபிலன் ஒரு நெகிழ்ச்சியான சந்திப்பு

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் 'கபாலி' படத்தின் படப்பிடிப்பு சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது...

நண்பன், எந்திரன் படங்களுடன் கனெக்ஷன் ஆன 'புலி'

இளையதளபதி விஜய் நடித்த 'புலி' திரைப்படம் வரும் அக்டோபர் 1ஆம் தேதி பிரமாண்டமாக ரிலீஸ் ஆகவுள்ளது. உலகின் முக்கிய நாடுகளான அமெரிக்கா...

திருச்செந்தூர் முருகன் கோவிலில் ஹன்சிகா

பிரபல நடிகை ஹன்சிகா நடிப்பில் மட்டுமின்றி சமூக சேவை மற்றும் பக்தியிலும் ஈடுபாடு உள்ளவர் என்பது அனைவரும் அறிந்ததே...