'புலி' படத்தை பார்த்து ஸ்ரீதேவி அதிருப்தி அடைந்தாரா? சிம்புதேவன் மறுப்பு
Send us your feedback to audioarticles@vaarta.com
விஜய் நடித்த 'புலி' திரைப்படம் வரும் அக்டோபர் 1ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக ரிலீஸாகவுள்ள நிலையில் இந்த படத்தில் விஜய்க்கு அடுத்து மிகவும் முக்கிய கேரக்டரில் நடித்துள்ள ஸ்ரீதேவி, படத்தை பார்த்து அதிருப்தி அடைந்ததாக ஒரு செய்தி தற்போது மிக வேகமாக சமூக இணையதளங்களில் பரவி வருகிறது.
தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் தயாராகியுள்ள இந்த படத்தில் ஸ்ரீதேவி மட்டுமே மூன்று மொழிகளிலும் சொந்தக்குரலில் டப்பிங் பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்திற்காக ஸ்ரீதேவி டப்பிங் செய்யும்போது தான் நடித்த பல காட்சிகள் படத்தில் இல்லாததால் அவர் இயக்குனர் சிம்புதேவன் மீது அதிருப்தியில் இருந்ததாக செய்திகள் வெளிவந்தன.
ஆனால் இதற்கு இயக்குனர் சிம்புதேவன் மறுப்பு தெரிவித்துள்ளார். ஸ்ரீதேவி என் மீது கோபப்பட்டார் என்பதில் எவ்வித உண்மையுமில்லை, படம் குறித்து அவர் சந்தோசமாகவே இருக்கிறார் என்று கூறியுள்ளார். சிம்புதேவனின் விளக்கத்திற்கு பின்னர் இந்த பிரச்சனைக்கு ஒரு முற்றுப்புள்ளி ஏற்பட்டுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments