குணமா வாயால சொல்லனும்: 'என்.ஜி.கே. அப்டேட் குறித்து தயாரிப்பாளர்
Send us your feedback to audioarticles@vaarta.com
சூர்யா நடிப்பில் செல்வராகவன் இயக்கி வரும் 'என்.ஜி.கே' படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ள நிலையில் இந்த படம் தீபாவளி அன்று வெளியிட முதலில் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் சில எதிர்பாராத காரணத்தால் இந்த படம் தீபாவளி கழித்தே வெளியாகும் என தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு தனது சமூக வலைத்தளத்தில் கூறியிருந்தார்.
இருப்பினும் 'என்.ஜி.கே குறித்த எந்த அப்டேட்டும் வராததால் ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த சூர்யா ரசிகர்கள் தயாரிப்பாளரை சமூக வலைத்தளத்தில் கடுமையாக விமர்சனம் செய்தனர்.
இந்த நிலையில் சற்றுமுன் எஸ்.ஆர்.பிரபு தனது சமூக வலைத்தள பக்கத்தில், 'செப்டம்பர் மாதம் என்.ஜி.கே. குறித்த அறிவிப்பு எதுவும் இன்றி ஒருவழியாக முடிவுக்கு வந்துவிட்டது. ஆனால் அக்டோபரில் கண்டிப்பாக 'என்.ஜி.கே' அப்டேட் இருக்கும் என்று உறுதியளித்துள்ளார். மேலும் 'குருபெயர்சிக்கு அப்புறம் எல்லாரும் குணமா வாயால சொல்லனும் முருகா' என்றும் அவர் நகைச்சுவையுடன் குறிப்பிட்டுள்ளார். தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபுவின் இந்த அப்டேட்டிற்கு சூர்யா ரசிகர்கள் நன்றி தெரிவித்து வருகின்றனர்.
Hey guys... September is coming to an end without much to update on #NGK We can assure few updates in October??
— S.R.Prabhu (@prabhu_sr) September 30, 2018
குருபெயர்சிக்கு அப்புறம் எல்லாரும் குணமா வாயால சொல்லனும் முருகா??????
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments