இந்தியில் ரீமேக் ஆகும் சூப்பர்ஹிட் தமிழ் திரைப்படம்: எஸ்.ஆர்.பிரபு வாழ்த்து!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழில் சூப்பர் ஹிட்டான திரைப்படம் ஒன்று ஹிந்தியில் ரீமேக் ஆக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து அந்த படக்குழுவினர்களுக்கு பிரபல தயாரிப்பாளர் எஸ்ஆர் பிரபு அவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளார்
கடந்த 2016ஆம் ஆண்டு ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கப்பட்ட திரைப்படம் ’அருவி’. அருண்பிரபு இயக்கத்தில் அதிதி பாலன் நடிப்பில் உருவான இந்தத் திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இந்த படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்யப் போவதாக கடந்த சில மாதங்களாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருந்தன. அந்த தகவல் தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது
’அருவி’ படத்தின் இந்தி ரீமேக் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. இந்த படத்தை ஈ.நிவாஸ் என்பவர் இயக்கவுள்ளார். இன்னும் டைட்டில் வைக்கப்படாத இந்த படத்தை அப்பிளாஸ் என்டர்டைன்மென்ட் மற்றும் ஃபெயித் பிலிம்ஸ் ஆகிய இரு நிறுவனங்களும் இணைந்து தயாரிக்க இருப்பதாகவும் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் இரண்டு மாதங்களில் தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனை அடுத்து ’அருவி’ படத்தின் தயாரிப்பாளர் எஸ்ஆர் பிரபு அவர்கள் இந்த படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்யும் படக்குழுவினர்களுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
FATIMA SANA SHAIKH IN #TAMIL REMAKE... #FatimaSanaShaikh to star in #Hindi adaptation of #Tamil film #Aruvi... Directed by E Niwas... The film - not titled yet - is produced by Applause Entertainment and Faith Films [Viki Rajani]... Filming begins mid-2021. pic.twitter.com/2JW5GiYVnv
— taran adarsh (@taran_adarsh) March 5, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com