'கைதி ' பட விவகாரத்தில் முழு விபரம் தெரியாமல் செய்தி வெளியிடுவதா? எஸ்.ஆர்.பிரபு ஆதங்கம்
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல தயாரிப்பாளர் எஸ்ஆர் பிரபு தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான ’கைதி திரைப்படத்தின் கதை ஒரு உண்மையான கைதியின் கதை என்றும், அந்த கைதியிடம் ரூபாய் பதினைந்தாயிரம் மட்டும் கொடுத்து ஏமாற்றி அந்த கதையை அவருக்கே தெரியாமல் படமாக்கிவிட்டு நூறு கோடிக்கும் அதிகமாக தயாரிப்பாளரும் இயக்குநரும் சம்பாதித்து விட்டார்கள் என்றும் ஊடகம் ஒன்றில் செய்தி வெளியாகியுள்ளது
அதுமட்டுமின்றி மட்டுமின்றி ’கைதி திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை எஸ்ஆர் பிரபு தயாரிக்க நீதிமன்றம் தடை விதித்துள்ளது என்றும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் முதல் பாகத்தில் ’கைதி படத்தின் கதையின் உரிமைக்காக 4 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த செய்தி குறித்து தயாரிப்பாளர் எஸ்ஆர் பிரபு தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளதாவது: ஒரு வழக்கின் முழு விபரம் கூட அறியாமல் ஒரு இயக்குனரை களங்கப்படுத்தி செய்தி பதிவது கேவலமான செயல். அதை ஒரு செய்தி நிறுவனம் செய்வது அதனினும் மோசமானது. அட்மினுக்கு அறிவுறுத்துங்க ஐயா! என்று பதிவு செய்துள்ளார்.
ஒரு வழக்கின் முழு விபரம் கூட அறியாமல் ஒரு இயக்குனரை களங்கப்படுத்தி செய்தி பதிவது கேவலமான செயல். அதை ஒரு செய்தி நிறுவனம் செய்வது அதனினும் மோசமானது. அட்மினுக்கு அறிவுறுத்துங்க ஐயா! @polimernews https://t.co/sCfGKvVAXV
— SR Prabhu (@prabhu_sr) July 3, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout