அதிர்ஷ்டம் இருக்கு, அறிவு இல்லை: 'கைதி' டிக்கெட் எடுத்த ரசிகரை கலாய்த்த தயாரிப்பாளர்

  • IndiaGlitz, [Monday,October 21 2019]

வரும் வெள்ளியன்று விஜய் நடித்த ‘பிகில்’ மற்றும் கார்த்தி நடித்த ‘கைதி’ ஆகிய திரைப்படங்கள் வெளியாகவுள்ள நிலையில் விஜய் மற்றும் கார்த்தி ரசிகர்கள் டுவிட்டரில் சரமாரியாக மோதிக்கொள்கின்றனர். இந்த மோதலை அஜித் ரசிகர்கள் அமைதியாக வேடிக்கை பார்த்து கொண்டே ‘வலிமை’யை டிரெண்ட் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் ரசிகர்கள் ஒருவருக்கொருவர் நேரடியாக மோதி வரும் நிலையில் படக்குழுவினர்களும் ரசிகர்களை அவ்வப்போது கலாய்த்து வருகின்றனர். ஏற்கனவே தனது டுவிட்டர் பக்கத்தில் தான் ஒரு நல்ல பாம்பு, நல்ல படங்களை மட்டுமே எடுப்பேன் என பதிவு செய்த ‘கைதி’ தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு அவர்கள் தற்போது ‘கைதி’ டிக்கெட் எடுத்த ரசிகர் ஒருவரை ‘தம்பி உனக்கு அதிர்ஷ்டம் இருக்கு, அறிவு இல்ல போ’ என்று கலாய்த்துள்ளார்.

ஒரு டுவிட்டர் பயனாளி தான் ‘பிகில்’ படத்திற்கான டிக்கெட்டை ஆன்லைனில் புக் செய்வதற்கு பதிலாக தெரியாமல் ‘கைதி’ படத்தின் டிக்கெட்டை புக் செய்து விட்டதாகவும், அந்த டிக்கெட்டை வைத்து கொண்டு என்ன செய்வது என்று தெரியவில்லை என்றும் பதிவு செய்திருந்தார். இந்த பதிவுக்குத்தான் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு மேற்கண்டவாறு கலாய்த்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

More News

அரசு அறிவிப்பால் 'பிகில்', 'கைதி' படக்குழுவினர்களுக்கு கொண்டாட்டம்

விஜய் நடித்த 'பிகில்' மற்றும் கார்த்தி நடித்த 'கைதி' ஆகிய இரண்டு திரைப்படங்கள் வரும் அக்டோபர் 25-ஆம் தேதி தீபாவளி விருந்தாக வெளியாக உள்ளது.

அமலாபாலை அடுத்து நிர்வாணமாக நடிக்கும் தேசிய விருது பெற்ற நடிகை

நடிகை அமலாபால் ஆடை இல்லாமல் நடித்த 'ஆடை' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இந்த படத்தின் இந்தி ரீமேக் உரிமையை பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் மகேஷ் பட் என்பவர் பெற்றிருப்பதாக கூறப்படுகிறது

தனுஷின் அடுத்த படத்தில் பிரபல மலையாள நடிகர் 

தனுஷ் நடித்த 'அசுரன்' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டான நிலையில் தற்போது அவர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கி வரும் படத்தில் நடித்து வருகிறா

சூர்யாவின் அடுத்த பட இயக்குனர்: சஸ்பென்ஸை உடைத்த கார்த்தி

சுதா கொங்காரா இயக்கத்தில் சூர்யா நடித்து வந்த 'சூரரைப்போற்று' என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் அவர் அடுத்ததாக ஹரி, வெற்றிமாறன் மற்றும் சிறுத்தை சிவா

விஜய் மன்னிப்பு கேட்க வேண்டும்: பூ தொழிலாளர்கள் போராட்டம்

கடந்த சில வருடங்களாக விஜய் படம் பிரச்சனை இன்றி வெளியானதாக சரித்திரம் இல்லை. அந்த வகையில் 'பிகில்' திரைப்படமும் ஆரம்பித்ததில் இருந்தே பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருகின்றன