தடுப்பூசியில் கூட விளம்பரம் தேடும் காங்கிரஸ்-பாஜக: தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபுவின் ஆலோசனை
- IndiaGlitz, [Monday,May 24 2021]
கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து பொதுமக்கள் தப்பிப்பதற்கு அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்ற விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகின்றது. ஏற்கனவே கிட்டத்தட்ட பலருக்கு முதல் டோஸ் போட்டு முடித்து விட்ட நிலையில் தற்போது இரண்டாவது டோஸ் போடும் பணியும் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் தடுப்பூசி போடும் சான்றிதழில் பிரதமர் மோடியின் புகைப்படம் பதிவு செய்யப்பட்டுள்ளதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அந்தந்த மாநில முதல்வரின் புகைப்படம் தான் பதிவு செய்ய வேண்டும் என்று கூறி வருகின்றனர். இதனை அடுத்து காங்கிரஸ் கட்சி ஆளும் சட்டீஸ்கர் மாநிலத்தில் முதல்வர் மோடியின் படம் எடுக்கப்பட்டு அதற்கு பதிலாக அம்மாநில முதல்வர் படம் இடம்பெற்றுள்ளது. இதற்கு ஒரு புறம் பாஜக கண்டனம் தெரிவித்துள்ள நிலையில் முதல்வர் படம் இடம்பெற்றதில் எந்த தவறும் இல்லை என காங்கிரஸ் விளக்கம் கூறுகிறது.
இந்த நிலையில் தடுப்பூசி சான்றிதழில் கூட காங்கிரஸ், பாஜக விளம்பரம் தேடி வரும் நிலையில் இது குறித்து தனது சமூக வலைத்தளத்தில் பிரபல தயாரிப்பாளர் எஸ்ஆர் பிரபு கூறியிருப்பதாவது: தடுப்பூசி யாருக்கு போடுறாங்களோ, அவங்க படத்த சான்றிதழ்ல போடுங்கப்பா. இன்னும் அதிக நம்பகத்தன்மையுடனாவது இருக்கும். மத்திய அரசோ, மாநில அரசோ, எல்லாம் மக்கள் பணத்துலதான ஊசி/மருந்து வாங்கறோம்’ என்று கூறியுள்ளார்.
தடுப்பூசி யாருக்கு போடுறாங்களோ, அவங்க படத்த சான்றிதழ்ல போடுங்கப்பா. இன்னும் அதிக நம்பகத்தன்மையுடனாவது இருக்கும். மத்திய அரசோ, மாநில அரசோ,எல்லாம் மக்கள் பணத்துலதான ஊசி/மருந்து வாங்கறோம்??. #CovidIndia #VaccineComedies
— SR Prabhu (@prabhu_sr) May 23, 2021