ஜோதிகா பேசியதை அரைகுறையாக புரிந்து கொண்ட அன்பர்கள்: பிரபல தயாரிப்பாளர்
Send us your feedback to audioarticles@vaarta.com
சமீபத்தில் நடந்த சினிமா விழா ஒன்றில் கலந்து கொண்ட நடிகை ஜோதிகா, தஞ்சை பெரிய கோவில் குறித்து சர்ச்சைக்குரிய ஒரு கருத்து கூறியதாக இணையதளங்களில் பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். உண்மையில் அவர் என்ன பேசினார் என்பதை புரிந்து கொள்ளாமல், அல்லது புரிந்து கொண்டு வேண்டுமென்றே சர்ச்சையாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் சமூக வலைத்தளத்தில் சிலர் சர்ச்சையை எழுப்பியதாக கோலிவுட் பிரபலங்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
ஜோதிகாவின் உண்மையான நோக்கம் என்ன? அவர் ஏன் அவ்வாறு பேசினார் என்பது குறித்து ஜோதிகா நடித்து வரும் ஒரு படத்தை இயக்கி வரும் இரா.சரவணன் என்பவர் நேற்று தனது ஃபேஸ்புக்கில் நீண்ட விளக்கம் அளித்தார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் சூர்யா, கார்த்தி, ஜோதிகா நடித்த படங்களை தயாரித்த பிரபல தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு அவர்கள் தனது சமூக வலைத்தளத்தில் இதுகுறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது;
‘ராட்சசி’படத்தில் பேசிய வசனத்தின் பொருளை நேரில் உணர்ந்த ஜோதிகா அண்ணி, அப்படத்திற்காக விருது வழங்கப்பட்ட பொழுது பேசியது அரைகுறை அர்த்தம் கண்டு அநாகரீகமாக சில அன்பர்களால் பிரபலப்படுத்தப்பட்டு வருகிறது. நல்ல கருத்தை நாடறியச் செய்வதே உங்கள் வெறுப்பு அரசியலின் சாதனை. வேறென்ன சொல்ல’ என்று கூறியுள்ளார். எஸ்.ஆர்.பிரபு அவர்களின் இந்த டுவீட் தற்போது வைரலாகி வருகிறது.
#Raatchasi படத்தில் பேசிய வசனத்தின் பொருளை நேரில் உணர்ந்த #ஜோதிகா அண்ணி, அப்படத்திற்காக விருது வழங்கப்பட்ட பொழுது பேசியது அரைகுறை அர்த்தம் கண்டு அநாகரீகமாக சில அன்பர்களால் பிரபலப்படுத்தப்பட்டு வருகிறது. நல்ல கருத்தை நாடறியச் செய்வதே உங்கள் வெறுப்பு அரசியலின் சாதனை.வேறென்ன சொல்ல??
— S.R.Prabhu (@prabhu_sr) April 24, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout