சூர்யா-கார்த்தி ரசிகர்களுக்கு பிரபல தயாரிப்பாளரின் வேண்டுகோள்!

கொரோனா வைரஸ் காரணமாக தமிழகம் முழுவதும் கடந்த சில வாரங்களாக ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதை அடுத்து லட்சக்கணக்கான ஏழை எளிய மக்கள் வேலையின்றி, வருமானம் இன்றி பசியால் வாடுகின்றனர். இருப்பினும் பல சமூக ஆர்வலர்கள், தன்னார்வலர்கள் ஏழை எளிய மக்களுக்கு ரொக்கம் மற்றும் உணவுப்பொருட்கள் கொடுத்து உதவி செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் ஏழை, எளிய மக்களின் பசியை போக்குவதில் மாஸ் நடிகர்களின் ரசிகர்களின் பங்கு மகத்தானது. ரஜினி, அஜித், விஜய் உள்பட பல நடிகர்களின் ரசிகர்கள் தங்கள் சொந்த காசை போட்டு ஏழை, எளிய மக்களின் உணவுத்தேவையை பூர்த்தி செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாகவே சூர்யா மற்றும் கார்த்தி ரசிகர்கள் இணைந்து ஏழை, எளிய மக்களுக்கு உணவளிக்கும் சேவையை செய்து வருகின்றனர். இந்த நிலையில் பிரபல தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு தனது சமூக வலைத்தளத்தில் சூர்யா, கார்த்தி ரசிகர்களுக்கு ஒரு வேண்டுகோளை விடுத்துள்ளார். அவர் கூறியதாவது: சூர்யா மற்றும் கார்த்தி ரசிகர்கள் கடந்த சில நாட்களாக ஓய்வின்றி மாநிலம் முழுவதும் ஏழை மக்களுக்கு உணவு மற்றும் மாஸ்குகள் கொடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுடைய சேவைக்கு பாராட்டுக்கள். ஆனால் அதே நேரத்தில் அவர்களுக்கு ஒரு வேண்டுகோள். பொதுமக்களுக்கு உதவி செய்யும் போது மாஸ்க் உள்ளிட்ட பாதுகாப்பான உபகரணங்களை அணிந்து கொள்ளுங்கள், அதேபோல் சமூக விலகலையும் கட்டாயம் கடைபிடியுங்கள்’ என்று கூறியுள்ளார்.

More News

மனைவி, குழந்தைகளுக்கு அரிசி-பருப்பு வாங்கி கொடுத்துவிட்டு தற்கொலை செய்த பெயிண்டர்

கடந்த சில வாரங்களாக இந்தியாவில் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி நூற்றுக்கணக்கான மனித உயிர்களை பலி வாங்கிக் கொண்டிருக்கும் நிலையில் கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும்

கொரோனாவால் சிகிச்சை பெற்று வரும் மகளின் வருகைக்காக காத்திருக்கும் தாயின் சடலம்!

இங்கிலாந்து நாட்டில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தாய் மற்றும் மகள் ஆகிய இருவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் கொரோனாவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும்

மும்பையில் கொரோனா நோய்த்தொற்றினால் பாதிக்கப்பட்ட 20 கடற்படை மாலுமிகள்!!!

இந்தியாவில் கொரோனா நோய்த்தொற்றின் பாதிப்பு அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலம்,

ஊரடங்கை தளர்த்த கோரும் அமெரிக்க மாகாணங்கள்!!! பதறும் சுகாதாரத்துறை அதிகாரிகள்!!!  

அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 7 லட்சத்தைத் தாண்டியிருக்கிறது. அதேபோல பலி எண்ணிக்கையும் 35 ஆயிரத்தைத் தாண்டியிருக்கிறது.

கொரோனாவில் இறந்தவர்களின் பலி எண்ணிக்கையை சீன அரசு மறைக்கிறதா??? தொடரும் குற்றச்சாட்டுகளுக்கான பதில்!!!

சீனாவின் வுஹாண் மாகாணத்தில் கொரோனா நோய்த்தொற்றில் இறந்தவர்களின் எண்ணிக்கையை குறைத்து வெளியிட்டதாக அமெரிக்கா முதற்கொண்டு பல மேற்கத்திய நாடுகள் கடுமையாகக் குற்றம்சாட்டி வந்தன.