'தீரன்' படத்தை திருட்டு இணையதளத்தில் பாருங்கள்: தயாரிப்பாளரின் தைரியமான பதில்
Send us your feedback to audioarticles@vaarta.com
கார்த்தி, ராகுல் ப்ரித்திசிங் நடிப்பில் வினோத் இயக்கிய 'தீரன் அதிகாரம் ஒன்று' திரைப்படம் கார்த்தியின் பெஸ்ட் படமாக அமைந்திருக்கும் நிலையில் இந்த படத்தை ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் பார்த்து வருகின்றனர்.
இந்த நிலையில் வெளிநாட்டில் உள்ள ரசிகர் ஒருவர் இந்த படத்தின் தயாரிப்பாளரிடம் கோரிக்கை ஒன்றை சமூக வலைத்தள பக்கத்தில் வைத்துள்ளார். 'தீரன்' படத்தின் சப்டைட்டிலுடன் இருக்கும் நல்ல பதிப்பை காசு கொடுத்து இணையத்தில் பார்க்கும் வாய்ப்பு உள்ளதா? நான் இருக்கும் இடத்தில் படம் சப்டைட்டிலுடன் வெளியாகவில்லை. படத்தை பார்க்க மிக மிக ஆவலுடன் இருக்கிறேன். தயவு செய்து உதவிசெய்யுங்கள்" என்று இந்த படத்தின் தயாரிப்பாளரிடம் அவர் கேட்டுள்ளார்.
இந்த கேள்விக்கு "முடிந்தால் 25 நாட்கள் காத்திருங்கள். அமேசான் ப்ரைம் வீடியோவாக வெளியாகும். இல்லையென்றால் திருட்டுத்தனமான இணையம் ஒன்றை தேடிப் பிடித்துப் பாருங்கள். பின் 'தீரன் அதிகாரம் ஒன்று' பெயரில் 10 டாலர்களை இல்லாதவர்களுக்கு தானமாகக் கொடுங்கள். நான் மகிழ்வேன், நீங்களும் நிம்மதியாக இருப்பீர்கள். என்னை நம்புங்கள்' என்று தைரியமான ஒரு பதிலை அளித்துள்ளார். எஸ்.ஆர்.பிரபுவின் இந்த பதில் சமூக வலைத்தள பயனாளிகள் இடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments