தயாரிப்பாளர்கள் இந்த ஆபத்தை உணர வேண்டும்: எஸ்.ஆர்.பிரபு கோரிக்கை
- IndiaGlitz, [Sunday,November 18 2018]
கோலிவுட் திரையுலகில் ஒவ்வொரு வெள்ளியன்றும் குறைந்தது நான்கு படங்கள் வெளியாகி வருகிறது. அப்படி இருந்தும் ரிலீசூக்கு தயாராக இருக்கும் படங்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. எந்த ஒரு பொருளும் உற்பத்தி அதிகமானால் மார்க்கெட்டில் அதன் டிமாண்ட் குறைந்துவிடும் என்பது வர்த்தகத்தின் அசைக்கமுடியாத விதி. இதனை கோலிவுட் திரையுலகினர் உணரவேண்டும் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் இதுகுறித்து சமூக வலைத்தளம் மூலம் பிரபல தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு அவர்களுக்கு கேள்வி ஒன்று வைக்கப்பட்டது. அந்த கேள்வி, 'குறிப்பிட்ட இடைவெளியில் ஒவ்வொரு நடிகரின் படம் வரலாமே...ஓரே நடிகர் படங்கள் தொடர்ந்து 5 வாரங்களுக்கு ஒருமுறை வருவதை கூட கட்டுப்பாடு செய்தால் இந்த குழப்பம் சற்று குறையும்...
இந்த கேள்விக்கு பதிலளித்த எஸ்.ஆர்.பிரபு, 'அனைத்து தயாரிப்பு தொழிலிலும் உள்ள பிரச்சினைதான். தேவைக்கு அதிகமாக தயாரிக்கப்படும் பொழுது எந்தப்பொருளும் வீணாவதை தவிர்க்க இயலாது. தயாரிப்பாளர்கள் இதன் ஆபத்தை உணர்ந்தே படம் ஆரம்பிக்க வேண்டும். உணர்ச்சிப்பூர்வமாக மட்டுமே படங்களை அனுகுவது வெறும் ஏமாற்றங்களையே தரும்! என்று கூறியுள்ளார்.