தங்கம் விலை குறைவைத் தொடரும் மீண்டும் எகிறுமா? விளக்கம் அளிக்கும் பிரத்யேக வீடியோ!
- IndiaGlitz, [Wednesday,March 31 2021]
கடந்த வருடம் ஜனவரியில் 42 ஆயிரத்தை எட்டியிருந்த தங்கத்தின் விலை தற்போது இந்த வருடம் மார்ச் மாதத்தில் கிட்டத்தட்ட 10 ஆயிரம் குறைந்து இருக்கிறது. இப்படி ஏற்ற, இறக்கம் கொண்ட தங்கத்தின் விலை ஏற்றத்திற்கும் இறக்கத்திற்கும் பல்வேறு சர்வதேச காரணங்கள் இருந்து வரும் நிலையில் தற்போது குறைந்து இருக்கும் தங்கத்தின் விலை, ஒருவேளை மீண்டும் எகிறிவிடுமோ? என்ற அச்சமும் பொதுமக்களிடம் இருந்து வருகிறது.
இதுகுறித்து தங்க விற்பனையாளர் சந்தானகுமார் அவர்கள் நமக்கு பிரத்யேக நேர்காணல் அளித்து உள்ளார். அந்த நேர்காணலில் தங்கத்தின் விலைக் குறைப்புக்கு அடிப்படைக் காரணமாக இருப்பது நம்முடைய மத்திய பட்ஜெட்டில் 12.5% ஆக இருந்த இம்போர்ட் டியூட்டி தற்போது 7.5% ஆக குறைந்து இருப்பதும் ஒரு காரணம் என எடுத்து கூறியுள்ளார். இந்த அறிவிப்புக்கு பின்னரே இந்தியாவில் ஒரு சவரன் தங்கத்தின் விலை 1,500 இல் இருந்து 2,000 ஆயிரம் வரை குறையத் தொடங்கி உள்ளது.
மேலும் சர்வதேச விலை நிர்ணயத்தில் காணப்படும் தற்போதைய சூழலும் தங்க விலை கணிசமாக குறைந்து இருப்பதற்கு காரணமாக உள்ளது. இப்படி விலை குறைந்து இருக்கும் தங்கம் மீண்டும் எகிறுவதற்கு வாய்ப்பு இருக்கிறதா? என்ற சந்தேகம் அனைவரிடமும் இருந்து வருகிறது. இந்தச் சந்தேகத்தை அடிப்படையாகக் கொண்டே இந்த நேர்காணல் அமைந்து இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் மீண்டும் தங்கத்தின் விலை எகிறுமா? விலை குறைந்து இருக்கும் இந்நேரத்தில் தங்கத்தில் முதலீடு செய்யலாமா? தங்கம் விலை குறைவைத் தொடர்ந்து வியாபாரிகள் என்ன விதமான நட்டத்தை சந்திப்பார்கள்?, தற்போது தங்கம் விலை குறைந்து இருப்பதால் விற்பனை எப்படி இருக்கிறது? இதுபோன்ற பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்து சந்தானகுமார் அவர்கள் நமக்கு நேர்காணல் அளித்து உள்ளார். ஏழை, எளிய மக்களின் முதலீடுகள் அனைத்தும் தங்கத்தில் செலுத்தப்பட்டு வரும் நிலையில் இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் அதிக கவனம் பெற்று இருக்கிறது.