பிரின்ஸ் மகேஷ்பாபுவின் 'ஸ்பைடர்' டீசர் விமர்சனம்
Send us your feedback to audioarticles@vaarta.com
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் பிரின்ஸ் மகேஷ்பாபு நடிப்பில் உருவாகியுள்ள 'ஸ்பைடர்' படத்தின் டீசர் இன்று மகேஷ்பாபு பிறந்த நாளை முன்னிட்டு சற்று முன் வெளியாகியுள்ளது.
ஏ.ஆர்.முருகதாஸின் வழக்கமான பிரமாண்டம், அழுத்தமான வசனங்கள் இந்த படத்திலும் உள்ளது என்பது இந்த டீசரில் இருந்து தெரிகிறது. குறிப்பாக ஒரு பெரிய பாராங்கல் உருண்டு வருவதன் கிராபிக்ஸ் காட்சியின் பிரமாண்டம் ஹாலிவுட் படங்களுக்கு இணையானது என்று கூறுவதில் மிகையில்லை.
'ஜனத்தொகையை கட்டுப்பாட்டுல வச்சுக்கிறதுல, கவர்ன்மெண்ட், பூகம்பம், சுனாமி அதோட எனக்கும் கொஞ்சம் பங்கு இருக்கு'.
'உன்னை மாதிரி ஒருத்தன் இருக்குற ஊருல தான் அவனை மாதிரி ஒருத்தன் இருப்பான்'.
'பயம், அதை கொடுத்தது யார்? நாங்க....
'அன்னிக்கு அந்த கூட்டத்தில நீ ஒளிஞ்சிருந்தியே அதுதான் பயம். பயத்தை காட்ட எங்களுக்கும் தெரியும்'.
போன்ற வசனங்கள் டீசரில் மட்டுமே இருக்கின்றது என்றால் படத்தில் இன்னும் அதிகம் எதிர்பார்க்கலாம்.
ராகுல் ப்ரித்திசிங் ரொமான்ஸ் பகுதி சுவாரஸ்யமாக இருக்கும் என்பது ஒரே ஒரு காட்சியிலேயே புரிகிறது. ஆர்ஜே பாலாஜிக்கு காமெடி மட்டுமின்றி சீரியஸ் காட்சிகளும் இருக்கும் என்பதும் தெரிய வருகிறது. ஆக்சன் காட்சிகள் அதிர வைக்கின்றது. மொத்தத்தில் படத்தின் எதிர்பார்பார்ப்பை இந்த டீசர் எகிற வைத்தது என்றே கூறலாம். பிரின்ஸ் மகேஷ்பாபுவுக்கு நமது பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com