மகேஷ்பாபுவின் 'ஸ்பைடர்' ஓப்பனிங் வசூல் எப்படி?

  • IndiaGlitz, [Monday,October 02 2017]

இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் மற்றும் மகேஷ்பாபு முதன்முதலில் இணைந்த 'ஸ்பைடர்' திரைப்படத்திற்கு ரிலீசுக்கு முன்னரே மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்த நிலையில் இந்த படம் கடந்த 27ஆம் தேதி வெளிவந்தது.

இந்த படத்திற்கு ஊடகங்கள் கலவையான விமர்சனத்தை அளித்த போதிலும் நீண்ட விடுமுறை மற்றும் போட்டிக்கு பெரிய படங்கள் இல்லாததால் நல்ல ஓப்பனிங் வசூலை தமிழகம் முழுவதும் பெற்றுள்ளது.

சென்னையில் இந்த படம் கடந்த வார இறுதி நாட்களில் 21 திரையரங்க வளாகங்களில் 210 காட்சிகள் திரையிடப்பட்டு ரூ.1,19,00,502 வசூல் செய்துள்ளது. மேலும் திரையரங்குகளில் 90% பார்வையாளர்கள் இருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த படம் ரிலீஸ் ஆன கடந்த 27ஆம் தேதி முதல் அக்டோபர் 1 வரை ரூ.2,08,34,142 வசூல் செய்துள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் சேர்த்து சென்னையில் இந்த படம் ரூ.2,69,89,344 வசூலாகியுள்ளது. எனவே மகேஷ்பாபுவின் முதல் நேரடி தமிழ்ப்படமான 'ஸ்பைடர்' தமிழகத்தில் ஓப்பனிங் வெற்றி என்பது குறிப்பிடத்தக்கது.

More News

சீயான் விக்ரமின் மகன் துருவ் அறிமுகமாகும் தமிழ்ப்படம்

சீயான் விக்ரமின் மகன் துருவ் கடந்த சில மாதங்களாகவே தமிழ் திரையுலகில் அறிமுகமாகவுள்ளதாக செய்திகள் வெளிவந்த நிலையில் தற்போது அந்த செய்தி உறுதியாகியுள்ளது.

பிரபல இயக்குனரின் படத்தில் முதல்முறையாக கார்த்திக்-கவுதம் கார்த்திக்

தமிழ் சினிமாவில் தந்தை-மகன் இணைந்து நடிப்பது புதிதல்ல. சிவாஜி-பிரபு, சிவகுமார்-சூர்யா, சத்யராஜ்-சிபிராஜ், விஜயகாந்த்-சண்முகப்பாண்டியன் என உண்மையான தந்தை-மகன் நடித்த படங்கள் பல உள்ளது

'குறள்' தலைப்பு படத்தில் தமிழுக்கு அறிமுகமாகும் பிரபல தெலுங்கு நடிகரின் மகன்

பிரபல தெலுங்கு நடிகர் மோகன்பாபுவின் மகன் விஷ்ணு மஞ்சு தெலுங்கில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் நிலையில் முதல்முறையாக தமிழ்ப்படம் ஒன்றில் நடிக்கவுள்ளார்.

சிம்புவின் அடுத்த ரிலீஸ் தேதி அறிவிப்பு

சிம்பு தற்போது ஆங்கிலப்படம் மற்றும் மணிரத்னம் படம் ஆகியவற்றில் நடிக்க தயாராகி வரும் நிலையில் அவர் இசையமைத்த 'சக்க போடு போடு ராஜா' படத்தின் சிங்கிள் ரிலீஸ் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

சிவாஜி மணிமண்டப திறப்பு விழாவில் துணைமுதல்வருடன் கமல்-ரஜினி

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் மணிமண்டபத்தை தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் சற்றுமுன் திறந்து வைத்து சிவாஜி கணேசன் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.