ஆந்திராவில் ஆரம்பித்து ரொமானியாவில் முடியும் 'ஸ்பைடர்'
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ்பாபு நடித்து வரும் 'ஸ்பைடர்' படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்துவிட்டது. ஆந்திராவின் ஐதராபாத்தில் கடந்த ஆண்டு ஆரம்பித்த இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒரே ஒரு பாடல் காட்சியுடன் முற்றிலும் முடிவடையவுள்ளது. இந்த பாடல் காட்சியும் ரொமானியாவில் படமாக்க அனைத்து ஏற்பாடுகளும் தயாராக உள்ளது.
பெரும் பொருட்செலவில் பிரமாண்டமாக உருவாகியுள்ள இந்த படத்தின் தமிழ் ரிலீஸ் உரிமையை லைகா நிறுவனம் பெற்றதில் இருந்தே இந்த படத்தின் எதிர்பார்ப்பு பல மடங்கு அதிகரித்துள்ளது. லைகா நிறுவனம் இந்த படத்திற்கு மிகப்பெரிய அளவில் புரமோஷன் செய்ய முடிவு செய்துள்ளதால் இந்த படத்தின் ஓப்பனிங் வசூல் பல சாதனைகளை முறியடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மகேஷ்பாபுவின் முதல் நேரடி தமிழ்ப்படமான இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக ராகுல் ப்ரித்திசிங் நடித்துள்ளார். மேலும் முதல்முறையாக நடிகர் எஸ்.ஜே.சூர்யா இந்த படத்தில் வில்லனாகவும் தோன்றுகிறார். மேலும் இந்த படத்தில் பரத், ஆர்ஜே பாலாஜி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவும், ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பும் செய்துள்ளனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout