'ஸ்பைடர்' படத்தின் கடந்த வார வசூல் எப்படி?

  • IndiaGlitz, [Monday,October 09 2017]

ஏ.ஆர்.முருகதாஸ்-மகேஷ்பாபு கூட்டணியில் அமைந்த முதல் படமான 'ஸ்பைடர்' திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் கடந்த மாதம் 27ஆம் தேதி வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில் ஓப்பனிங்  மற்றும் முதல் வார வசூல் குறித்து ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் கடந்த வாரஇறுதி சென்னை வசூல் குறித்து தற்போது பார்ப்போம்

கடந்த வாரம் இந்த படம் சென்னையில் 19 திரையரங்குகளில் 197 காட்சிகள் திரையிடப்பட்டு ரூ.50,85,165 வசூல் செய்துள்ளது. திரையரங்குகளில் 80% பார்வையாளர்கள் இருந்தனர். 

மேலும் இந்த படம் கடந்த செப் 27 முதல் அக்டோபர் 8 வரை சென்னையில் தமிழ்ப்பதிப்பில் மட்டும் ரூ.3,30,74,164 வசூல் செய்துள்ளது. தமிழ், தெலுங்கு இரண்டு மொழிகளிலும் சேர்த்து ரூ.4,13,82,529 வசூல் செய்துள்ளது. சென்னையை பொருத்தவரையில் இந்த படம் விநியோகிஸ்தர்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளர்களுக்கு திருப்தியான வசூலையே கொடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது