வியட்நாம் மொழியில் டப் ஆகும் 'ஸ்பைடர்: ஏன் தெரியுமா?

  • IndiaGlitz, [Thursday,October 05 2017]

தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய 'ஸ்பைடர்' திரைப்படம் சமீபத்தில் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் வெளியானது. இந்த படத்திற்கு இரண்டு மொழிகளிலும் கலவையான விமர்சனங்கள் பெற்ற போதிலும் திருப்திகரமான ஓப்பனிங் வசூல் கிடைத்தது

இந்த நிலையில் 'ஸ்பைடர்' திரைப்படத்தை வியட்நாம் மொழியில் டப் செய்ய ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இந்த முயற்சியை பிரபல சண்டைப்பயிற்சி இயக்குனர் பீட்டர் ஹெய்ன் செய்து வருவதாக தெரிகிறது. பீட்டர் ஹெய்ன் பல ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவுக்கு குடிபெயர்ந்து தமிழர்களில் ஒருவராக மாறிவிட்டாலும், அவர் பிறந்து வளர்ந்தது வியட்நாமில்தான். தான் பணிபுரிந்த படம் தன்னுடைய தாய்நாட்டு மக்களுக்கு சென்றடைய வேண்டும் என்பதால் இந்த படத்தை அவர் டப்பிங் செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் இந்த படத்தில் இடம்பெற்ற ரோலர்கோலஸ்டர் சண்டைக்காட்சி வியட்நாமில் படமாக்கப்பட்டது. எனவே தங்கள் நாட்டில் படப்பிடிப்பு நடந்த படத்தை பார்க்க அந்நாட்டு மக்கள் விரும்புவார்கள் என்பதும் ஒரு காரணமாக தெரிகிறது. மகேஷ்பாபுவின் படம் வெளிநாட்டு மொழி ஒன்றில் டப் செய்யப்படுவது அவரது ரசிகர்களுக்கு பெருமைதான்.

More News

சுந்தர் சியின் 'கலகலப்பு 2' படத்தில் பிக்பாஸ் பிரபலம்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் அனைவருக்குமே இந்த நிகழ்ச்சி நல்ல விளம்பரத்தை தந்துள்ளது. யார் என்றே தெரியாமல் இருந்த ஆரவ் இன்று தமிழகத்தின் டாக் ஆப் தி பெர்சன் ஆகிவிட்டார்.

சர்ச்சைக்குரிய பெண் சாமியாருக்கு இருக்கையை கொடுத்த போலீஸ் அதிகாரி

சாமியார் என்றாலே சர்ச்சைகளுக்கு இடமிருக்காது. பெண் சாமியார் என்றால் கேட்கவே வேண்டாம். கடந்த சில மாதங்களாகவே மும்பையை சேர்ந்த ராதே மா குறித்து சர்ச்சைக்குரிய செய்திகள் வெளியாகி வருவது தெரிந்ததே

விஜய் ஆண்டனியின் 'அண்ணாதுரை' டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு

இசையமைப்பாளர் மற்றும் நாயகன் விஜய் ஆண்டனி நடிப்பில் அறிமுக இயக்குனர் ஸ்ரீனிவாஸ் இயக்கியுள்ள படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து தற்போது போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் விறுவிறுப்புடன் நடந்து வருகிறது.

தமிழ்நாட்டின் தாவூத் இப்ராஹிம் கம்போடியாவில் தற்கொலை

தமிழகத்தின் தாவூத் இப்ராஹிம் என்று அழைக்கப்படும் காஞ்சிபுரத்தை சேர்ந்த பிரபல ரெளடி கம்போடியா நாட்டில் சயனைடு விஷம் அருந்தி திடிரென தற்கொலை செய்து கொண்டார்.

உதவி இயக்குனர்களாக மாறும் பிரபலங்களின் மகன்கள்

பிரபல நகைச்சுவை நடிகர், இயக்குனர் ரமேஷ்கண்ணாவின் இரண்டு மகன்களும் முன்னணி இயக்குனர்களிடம் உதவி இயக்குனர்களாக பணிபுரிந்து வருகின்றனர் என்ற தகவல் தற்போது வெளிவந்துள்ளது.