தெருக்குத்தெரு புதிதாக முளைத்த மாஸ்க் வியாபாரிகள்!!! தரம் குறித்த அச்சம்!!!

  • IndiaGlitz, [Wednesday,June 17 2020]

 

இந்தியாவில் கிட்டத்தட்ட அனைத்து மாநிலங்களும் பொது இடங்களுக்குச் செல்லும்போது மாஸ்க் அணிந்து செல்ல வேண்டும் என்ற விதிமுறையை வகுத்து இருக்கிறது. ஆனால் பொது மக்கள் அணியும் மாஸ்க் எந்த தரத்தில் இருக்க வேண்டும் என்ற வரையறை இந்திய மருத்துவக் கவுன்சில் இதுவரை வெளியிட வில்லை. அதனால் துணியினால் செய்யப்பட்ட மாஸ்க்குகளை பெரும்பாலான மக்கள் அணிந்து வெளியே செல்வது அதிகரித்து விட்டது. இந்நிலையில் துணியினால் அணியும் மாஸ்க்குகள் அதிக பாதுகாப்பினைக் கொடுக்காது என விஞ்ஞானிகள் கவலைத் தெரிவித்து உள்ளனர்.

கொரோனா ஊரடங்கினால் அனைத்துத் தொழில்களும் முடக்கப்பட்டு பெரும்பாலானவர்களுக்கு வேலையே இல்லாத நிலைமை நீடித்து வருகிறது. இதனால் எஞ்னியர்கள் முதற்கொண்டு படித்த பட்டதாரிகள் பல பேர் மாஸ்க் விற்கும் வேலையை கையில் எடுத்துள்ளனர். தமிழகத்தின் அனைத்து இடங்களிலும் தெருக்குத் தெரு புதிய மாஸ்க் வியாபாரிகள் முளைத்து இருக்கின்றனர். அவர்கள் விற்கும் பெரும்பாலான மாஸ்க்குகள் அவசர காலத்தில் தரம் குறைந்த துணி வகைகளால் தயாரிக்கப்பட்டவை என்பதும் குறிப்பிடத் தக்கது. சென்னையில் விற்கும் பெரும்பாலான மாஸ்க்குகள் குறைந்தது 20 ரூபாய்க்கு கிடைக்கிறது. இதுவே தமிழகத்தின் மற்ற மாவட்டங்களில் 10 ரூபாய்க்கு வாங்க முடிகிறது. அந்த வகையான மாஸ்க்குகள் சல்லடை போன்று இருக்கும் துணிகளால் இரு புறங்களிலும் எலாஸ்டிக்கை வைத்து தையல் போடப்பட்டு இருக்கும்.

பொதுவாக அறுவை சிகிச்சை மாஸ்க், N95 போன்றவை உறுதியான பாதுகாப்பை கொடுக்கும் என விஞ்ஞானிகள் சுட்டிக் காட்டுகின்றனர். இந்த மாஸ்க்குகள் மருந்து கடைகளில் மட்டுமே கிடைக்கும். பொருட்களுக்கு டூப்ளிகேட் செய்வதைப் போன்று சாலைகளில் நிற்கும் வியாபாரிகளும் இதேபோன்ற மாஸ்குகளை விற்க ஆரம்பித்து உள்ளனர். இவை காற்றில் தங்கி இருக்கும், அல்லது நீர்த்துளிகளில் இருந்து வெளியேறும் வைரஸ் கிருமிகளை மட்டுமல்ல காற்றில் வெளியேறும் தூசுக்களை கூட வடிகட்டாது என விஞ்ஞானிகள் அச்சுறுத்துகின்றனர். இந்த வகையான மாஸ்க்குகளுக்கு முறையான வரையைறைக் கொண்டுவர வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது.

முன்னதாக உலகச் சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் மாஸ்க்குகளை அனைவரும் கட்டாயம் அணியவேண்டும் என வலியுறுத்தவில்லை. ஆனால் கடந்த சில தினங்களுக்கு முன்பு பொது இடங்களுக்கு செல்லும் அனைவரையும் கட்டாயம் மாஸ்க் அணிய வலியுறுத்துமாறு உலக நாடுகளைக் கேட்டுக்கொண்டது. ஆனால் WHO அறிவிப்பிலும் துணியினாலான மாஸ்குகள் அணிவது ஒப்புக்கொள்ளப் பட்டு இருக்கிறது. கொரோனா வைரஸ் அறிகுறி இருப்பவர்கள், தனிமைப்படுத்தப் படுபவர்கள், மருத்துவ மனைகளில் பணியாற்றும் ஊழியர்கள், சுகாதாரத் துறை பணியாளர்கள் அனைவரும் கட்டாயம் அறுவைச் சிகிச்சை மாஸ்க் மற்றும் N95 மாஸ்க் அணிய வலியுறுத்தப்பட்டது. ஆஸ்துமா போன்ற குறைபாடு உள்ளவர்கள் N95 மாஸ்க் அணிவதைத் தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது. அதேபோல அமெரிக்காவின் FDA குழந்தைகளுக்கு மாஸ்க் அணிவிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டிருந்தது.

சில விஞ்ஞானிகள் துணியினால் ஆன மாஸ்க்குகள் குறித்து அதிக அச்சம் தெரிவித்து வரும் நிலையில் இதுபோன்ற மாஸ்க் வியாபாரத்திற்கும், மாஸ்க் அணியும் முறைகளுக்கும் முறையான வரையறைகளை கொண்டு வருவது நல்லது என்ற கோரிக்கையும் ஒருபுறம் வைக்கப்பட்டு வருகிறது. இதுவரை N95 மாஸ்க்குகள் மட்டுமே அனைத்து பாக்டீரியா, வைரஸ் போன்ற கிருமிகளிடம் இருந்து முறையான பாதுகாப்புத் தரும் என விஞ்ஞானிகள் பரிந்துரைக்கின்றனர் என்பதும் கவனிக்கத் தக்கது.

More News

மேலும் ஒரு திமுக பிரமுகருக்கு கொரோனா தொற்று உறுதி: பரபரப்பு தகவல்

சென்னை உள்பட தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளை கொரோனா வைரஸ் தாக்கி வரும் நிலையில் சென்னையில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

சீன எல்லை மோதலில் 20 இந்தியர்கள் வீரமரணம்: 43 சீன வீரர்கள் பலியானதாக தகவல்

இந்திய மற்றும் சீன எல்லையில் நேற்று இரவு இந்திய சீன ராணுவ வீரர்கள் இடையே நடந்த மோதலில் இந்திய தரப்பில் மூன்று இராணுவ வீரர்களும் சீன தரப்பில் 5 ராணுவ வீரர்களும் உயிரிழந்ததாக

நோயை பரப்பும் திட்டத்துடன் சென்னையை சுற்றிய கொரோனாவால் பாதித்த இளைஞர்: அதிர்ச்சி தகவல்

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனை அல்லது வீட்டில் தங்களை தாங்களே தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று சுகாதாரத்துறை அறிவுறுத்திய நிலையில்

புதுவைக்குள் நுழைய யாருக்கும் அனுமதி இல்லை: முதல்வரின் அதிரடி அறிவிப்பால் பரபரப்பு

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் மிக அதிகமாக பரவி வரும் நிலையில் சென்னை உள்பட ஒரு சில நகரங்களில் கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை உச்சக்கட்டத்தில் உள்ளது

சுஷாந்த்சிங்கின் கடைசி படம்: ரசிகர்களின் கோரிக்கையை முன்மொழிந்த ஏ.ஆர்.ரஹ்மான் 

பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த்சிங் மறைவு பாலிவுட் திரை உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது என்பது தெரிந்ததே. அவரது மறைவை இன்னும் கூட சில பாலிவுட் பிரபலங்கள் நம்பமுடியாமல்