நேற்று திடீரென வானத்தில் தோன்றிய பறக்கும் தட்டு? வைரல் வீடியோ!
- IndiaGlitz, [Thursday,January 28 2021]
நேற்று பாகிஸ்தான் விமானி ஒருவர் வித்தியாசமான வீடியோ ஒன்றை எடுத்து இருக்கிறார். பகல் நேரத்தில் எடுக்கப்பட்ட அந்த வீடியோவில் சூரிய ஒளியைவிட அதிகப் பிரகாசமான ஒரு ஒளி தெரிகிறது. மேலும் அது பார்ப்பதற்கு அச்சு அசலாக வட்ட வடிவத்தில் பறக்கும் தட்டை போன்றே இருக்கிறது. இந்த வீடியோ சமூக வலைத்தளம் மட்டுமல்லாது அந்நாட்டின் சர்வதேச ஏர்லைன்ஸ் நிறுவனத்தையும் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.
சில ஆண்டுகளாகவே பறக்கும் தட்டு, ஏலியன்ஸ் குறித்த செய்திகள் உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. இப்படி இருக்கும்போது நேற்று பாகிஸ்தான் நாட்டின் கராச்சிப் பகுதியில் இருந்து லாகூருக்கு A-325 எனும் விமானம் பயணம் செய்து இருக்கிறது. இந்த விமானம் ரகீம் யார் கான் எனும் இடத்திற்கு சென்றபோது ஒரு வித்தியாசமான ஒளி தெரிந்து இருக்கிறது. சூரிய ஒளி இருக்கும்போது இப்படி ஒரு பிரகாசமான ஒளியைப் பார்த்த அந்த விமானத்தின் பயணி உடனே அதை வீடியோவாகப் பதிவு செய்தார். மேலும் பாதுகாப்பு காரணங்களுக்காக விமானக் கட்டுப்பாட்டு அறைக்கும் அவர் தகவல் கொடுத்து உள்ளார்.
மேலும் ரகீம் யார் கான் பகுதியில் உள்ள குடியிருப்பு வாசிகளும் பறக்கும் தட்டு போன்று இருக்கும் அந்த ஒளியை பார்த்து வியந்துபோய் வீடியோ எடுத்து இருக்கின்றனர். இந்நிலையில் இந்த ஒளி பறக்கும் தட்டா அல்லது ஒரு செயற்கை கிரகமா என்பது இன்னும் உறுதிச் செய்யப்படவில்லை. பொதுவா சூரிய ஒளி இருக்கும் நேரத்தில் இப்படியொரு பிரகாசமான ஒளியை இதுவரை யாரும் பார்த்ததே இல்லை என்றே கூறுகின்றனர். இதனால் ஒருவேளை பறக்கும் தட்டாக இருக்குமோ என்ற சந்தேகத்தைப் பலரும் எழுப்பி உள்ளனர்.