ஆன்மிக அரசியல் என்றால், அது பாஜக அரசியல் தான்: தினகரன்
- IndiaGlitz, [Saturday,January 06 2018]
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் அறிமுகம் செய்துள்ள ஆன்மீக அரசியல் குறித்து பல தலைவர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் ஆர்.கே.நகர் தொகுதி எம்.எல்.ஏ தினகரன் ஆன்மீக அரசியல் குறித்து கூறியதாவது:
அரசியலுக்கும் ஆன்மீகத்திற்கும் சம்பந்தமில்லை. ஆன்மீகம் என்றாலே மதம் தான். ஆன்மீகம் என்பது மதம் இல்லாமல் இல்லை. மதம் என்பது ஒரு மனிதனை நல்வழிப்படுத்த, ஒழுக்கத்துடன் வைத்திருப்பது. ஒவ்வொரு மதத்திற்கும் ஒவ்வொரு கொள்கை உண்டு. ஒரு மதத்தின் கொள்கைக்கு இன்னொரு மதத்திற்கு வேற்றுக்கருத்து இருக்கும். ஆனால் அரசியல் என்பது மதச்சார்பற்றது. மக்களுக்கு சேவை செய்யும் ஒரு அமைப்பு. இதில் ஆன்மீகத்தையும் அரசியலையும் இணைப்பது தவறு.
பாஜக தற்போது செய்து கொண்டிருக்கும் மத அரசியல் ஆன்மீக அரசியல்தான். பெரும்பான்மை, சிறுபான்மை என வேறுபடுத்தி பாஜக அரசியல் செய்து கொண்டிருக்கின்றது. எனவே ஆன்மீக அரசியல் என்றால் அது பாஜக அரசியல்தான். ஆனால் ரஜினி எந்த அர்த்தத்தில் ஆன்மீக அரசியல் என்று கூறினார் என்று எனக்கு தெரியவில்லை
இவ்வாறு தினகரன் கூறியுள்ளார்.