ஆன்மீக அரசியல் என்பது மிகப்பெரிய பொய்: ரஜினியை போட்டுத் தாக்கும் ஆ.ராசா
Send us your feedback to audioarticles@vaarta.com
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் விரைவில் அரசியலுக்கு வரவுள்ளதாகவும், தன்னுடைய அரசியல் ஆன்மீக அரசியலாக இருக்கும் என்றும் கூறியுள்ள நிலையில் அவரது ஆன்மீக அரசியலை பல அரசியல் கட்சி தலைவர்கள் விமர்சனம் செய்தனர். அந்த வகையில் முன்னாள் தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் ஆ.ராசா, ரஜினியின் ஆன்மீக அரசியல் குறித்து தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் கூறியதாவது:
ஆன்மீகம் என்பதே இந்த உலக வாழ்க்கைக்காக ஏற்பட்டது அல்ல. எனக்கு எதுவுமே வேண்டாம், என்னை உன்னுடன் அழைத்து கொள் என்று கடவுளிடம் வேண்டுவதுதான் உண்மையான ஆன்மீகம். கடவுளை போய் சேர வேண்டியதுதான் ஆன்மீகம் என்றால் அந்த ஆன்மீகம் மக்களின் நலன் குறித்து எப்படி சிந்திக்கும்?
மக்களிடம் செல், மக்களிடம் கற்று கொள் என்று அண்ணா கூறினார். ஒரு அரசாங்கத்தை கட்டமைப்பது ஜனநாயகம் அல்ல, கடைசி மனிதனுக்கும் மரியாதை தரவேண்டும் என்று கூறுவதுதான் ஜனநாயகம் என்று அம்பேத்கர் கூறினார். இவர்கள் வழி நடப்பதுதான் அரசியலே தவிர ஆன்மீக அரசியல் என்பது ஒரு ஏமாற்று வேலை
ஜாதிமதமற்ற அரசியல் நிலைதான் ஆன்மீக அரசியல் என்று ரஜினிகாந்த் கூறுகிறார். அப்படியென்றால் அனைத்து ஜாதியினர்களும் அர்ச்சகர் ஆகலாம் என்று கருணாநிதி சட்டம் கொண்டு வந்தபோது ரஜினிகாந்த் தனது ரசிகர்களுடன் சென்று கருணாநிதியை சந்தித்து அவரது கரத்தை வலுப்படுத்தியிருக்க வேண்டும், அவர் செய்தாரா? என்று ஆ.ராசா கேள்வி எழுப்பியுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments