ஐபிஎல் பஞ்சாப் அணியில் இடம்பெற்ற தளபதி விஜய்யின் ரசிகர்

  • IndiaGlitz, [Thursday,December 20 2018]

2019ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் ஏலம் சமீபத்தில் நடந்தபோது ஐபிஎல் அணிகள் பல வீரர்களை ஏலம் எடுத்த நிலையில் பஞ்சாப் கிங்ஸ் IX அணி, தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி என்ற வீரரை ரூ.8.4 கோடிக்கு ஏலம் எடுத்தது.

சுழல் பந்துவீச்சாளரான வருணின் ஆரம்ப விலை ரூ.20 லட்சமே இருந்த நிலையில் அவரை ஒருசில அணிகள் எடுக்க போட்டி போட்டதால் விலை ஏறிக்கொண்டே போய் இறுதியில் பஞ்சாப் அணி ஏலம் எடுத்தது. தமிழக இளம் வீரர் ஒருவர் இவ்வளவு பெரிய தொகைக்கு ஏலம் போனது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

இந்த நிலையில் வருண் சக்கரவர்த்தி குறித்த முழு தகவல்களை ஒரு ஆங்கில ஊடகம் வெளியிட்டுள்ள நிலையில் அதில் அவர் தளபதி விஜய்யின் தீவிர ரசிகர் என்பதை குறிப்பிட்டுள்ளது. இது விஜய் ரசிகர்களுக்கு உற்சாகத்தை அளிப்பதோடு அவர் மைதானத்தில் விளையாடும்போது அவருக்கு விஜய் ரசிகர்கள் மிகுந்த ஆதரவு அளிப்பார்கள் என கருதப்படுகிறது.
 

More News

ஹன்சிகாவின் சர்ச்சை புகைப்படத்திற்கு இயக்குனர் விளக்கம்

நடிகை ஹன்சிகா நடிப்பில் இயக்குனர் ஜமீல் இயக்கி வரும் திரைப்படம் 'மஹா'. இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் சமீபத்தில் வெளிவந்தது.

தயாரிப்பாளர் சங்கத்தை பூட்டி, சாவியை முதல்வரிடம் ஒப்படைக்க முடிவு: எஸ்.வி.சேகர்

நடிகர் சங்க செயலாளரும், தயாரிப்பாளர் சங்க தலைவருமான விஷால் மீது தமிழக முதல்வரிடம் புகார் அளிக்கவுள்ளதாக நடிகர் எஸ்.வி.சேகர் தெரிவித்துள்ளார்.

சென்னையில் சன்னிலியோன்: ரசிகர்கள் குஷி

பிரபல பாலிவுட் கவர்ச்சி நடிகை சன்னிலியோன் தமிழில் தற்போது 'வீரமாதேவி' என்ற படத்தில் நடித்து வருகிறார்.

மேக்கப்மேன் முத்தப்பாவு மறைவுக்கு கமல்ஹாசன் அஞ்சலி

கமல்ஹாசன் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான முதல் படமான 'களத்தூர் கண்ணம்மா' படத்தில் அவருக்கு மேக்கப் போட்ட மேக்கப்மேன் முத்தப்பா நேற்று சென்னையில் அவரது இல்லத்தில் காலமானார்.

அஜித் மகனின் 'வேட்டிகட்டு' வீடியோ குறித்து பிரபல நடிகை

கோலிவுட் திரையுலகில் இருக்கும் நட்சத்திரங்களும் சமூக வலைத்தளங்கள் மூலம் பரபரப்பான கருத்துக்களை பதிவு செய்து வரும் நிலையில் மிகச்சில நட்சத்திரங்கள் மட்டுமே சமூக வலைதளங்களில் இல்லாமல் உள்ளனர்.