அவள்: ஹாலிவுட் படங்களுக்கு இணையாக உறைய வைக்கும் திகில் படம்

  • IndiaGlitz, [Monday,October 23 2017]

பேய்ப்படம் என்றால் பயத்தால் உறைய வைக்கும் காட்சிகள் இருக்கும் என்ற நிலை கடந்த சில வருடங்களாக மாறி பேய்ப்படம் என்றாலே காமெடி படம் என்ற நிலை கோலிவுட் திரையுலகில் ஏற்பட்டுவிட்டது.

இந்த நிலையில் உண்மையிலேயே உறைய வைக்கும் திகில் படம் ஒன்று தற்போது உருவாகியுள்ளது. அதுதான் சித்தார்த், ஆண்ட்ரியா நடிப்பில் மிலிண்ட் ராவ் இயக்கியுள்ள 'அவள்'

இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி அனைவரையும் அச்சுறுத்திய நிலையில் இந்த படம் திரையரங்கில் அச்சுறுத்த வரும் நவம்பர் 3ஆம் தேதி வெளியாகவுள்ளது. விக்ரம்வேதா உள்பட பல வெற்றிப்படங்களை ரிலீஸ் எய்த டிரடெண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் இந்த படத்தை ரிலீஸ் செய்கிறது. இதுகுறித்து டிரடெண்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன் அவர்கள் கூறியபோது, 'உண்மையாகவே பயமுறுத்தி நடுங்கவைக்கும் படம் தான் 'அவள்'. ஹாலிவுட் ஹாரர் படங்களுக்கு இணையாக 'அவள்' உள்ளது என கூறியுள்ளார். இந்த படம் எந்த அளவுக்கு ரசிகர்களை பயமுறுத்தும் என்பதை நவம்பர் 3ஆம் தேதி வரை பொறுத்திருந்து பார்ப்போம் 

More News

கந்துவட்டி கொடுமையால் தீக்குளிப்பு: மூவர் பலி, ஒருவர் உயிர் ஊசல்

கந்துவட்டி கொடுமையால் நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் இன்று காலை தீக்குளித்த 4 பேர்களில் மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இன்னொருவர் உயிர் ஊசலாடி வருவதால் அப்பகுதியே சோகத்தில் மூழ்கியுள்ளது.

மெர்சலுக்கு குவியும் கோலிவுட் திரையுலகினர்களின் ஆதரவு!

மெர்சல்' படத்திற்கு இதுவரை ஆதரவு கொடுத்த நடிகர்களின் கருத்துக்களை தனித்தனியாக பார்த்தோம். தற்போது மொத்தமாக ஒருதடவை பார்ப்போமா!

அஜித், விஜய், சூர்யாவின் ஒற்றுமையில் பங்கு கொண்ட ஏ.ஆர்.ரஹ்மான்

ஒரு திரைப்படத்தில் மூன்று வித்தியாசமான கேரக்டர்களில் ஒரு நடிகர் நடிப்பது என்பது மிகப்பெரிய விஷயம். சிவாஜி, கமல் போன்ற அனுபவம் வாய்ந்த நடிகர்களுக்கே இந்த பணி சவாலாக இருக்கும்.

தமிழிசை, எச்.ராஜா விக்கிபீடியா பக்கத்தில் கைவரிசை காட்டிய குசும்பர்கள்

பிரபலங்களின் விவரங்களை அறியும் இணையதளம் விக்கிபீடியாவில் யாருடைய பிரபலத்தின் பக்கங்களிலும் யார் வேண்டுமானாலும் எடிட் செய்து தங்களுக்கு தெரிந்த தகவல்களை பதிவு செய்யலாம்.

விஷால் அலுவலகத்தில் வருமான வரித்துறை சோதனை? பின்னணி என்ன?

நடிகர் சங்க செயலாளர் மற்றும் தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் அவர்களின் வீடு மற்றும் அலுவலகத்தில் வருமானவரித்துறை அதிகாரிகள் திடீரென சோதனையிட்டு வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.