உயிருக்குப் போராடும் கணவர்… விந்தணுக்களை கேட்டு மனைவி நடத்திய பாசப்போராட்டம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிருக்குப் போராடி வரும் கணவரின் விந்தணுக்களை சேகரித்து அதன் மூலம் குழந்தைப் பெற்றுக்கொள்ள அனுமதி வழங்கி உத்தரவிட்டு இருக்கிறது குஜராத் நீதிமன்றம். இப்படியொரு விசித்திர வழக்கை அந்நீதிமன்றம் வெறும் 15 நிமிடங்களில் தீர்த்து வைத்ததும் குறிப்பிடத்தக்கது.
குஜராத் மாநிலம் வதோதரா பகுதியில் வசித்துவரும் இளம்பெண் ஒருவருக்கு கடந்த அக்டோபர் மாதம் திருமணம் நடைபெற்று இருக்கிறது. இந்நிலையில் கடந்த மாதம் அந்தப் பெண்ணின் கணவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு அவர் வதோதராவில் உள்ள மருத்துவமனையில் தீவிரச் சிகிச்சை பெற்று வருகிறார்.
கொரோனாவின் தீவிரத்தால் தற்போது அவர் உடல்உறுப்புகள் செயல் இழக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டு உள்ளது. இதனால் தனது கணவரின் விந்தணுக்களை சேகரித்து தருமாறு அந்த இளம்பெண் மருத்துவர்களிடம் கேட்டுள்ளார். இதற்கு மருத்துவர்கள் மறுப்பு தெரிவிக்கவே அவர் குஜராத் நீதிமன்றத்தை நாடியுள்ளார். இந்த மனுவை அவசர வழக்காக விசாரித்த நீதிபதிகள் மருத்துவ ரீதியாக இதற்கு சாத்தியம் இருந்தால் உடனடியாக செய்யுங்கள் என உத்தரவிட்டு உள்ளனர்.
மேலும் வெறும் 15 நிமிடங்களில் இந்த மனுவை நீதிபதிகள் விசாரித்து முடித்ததாகவும் கூறப்படுகிறது. கணவரின் உடல்நிலை காரணமாக மனைவி செய்த இந்த பாசப்போராட்டம் பலரையும் கண்கலங்க வைத்திருக்கிறது.
இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட அந்த கணவரின் விந்தணுவிலும் பாதிப்பு இருக்குமா எனப் பலரும் சந்தேகம் எழுப்பி வருகின்றனர். இதுகுறித்து கருத்துத் தெரிவித்துள்ள மருத்துவர்கள் கொரோனா பாதித்தவர்களுக்கு விந்தணுக்களின் எண்ணிக்கை மிக குறைந்த அளவிற்கே குறைந்து போகிறது. மேலும் இதுபோன்ற குறைபாடு சிலருக்குத்தான் ஏற்பட்டு இருக்கிறது.
எனவே ஐவிஃப் முறையில் பாதுகாப்பாக செயற்கை கருவூட்டல் செய்யமுடியும் எனவும் நம்பிக்கை தெரிவித்து உள்ளனர். இந்நிலையில் உயிருக்குப் போராடும் தனது கணவரின் விந்தணுவிற்காக மனைவி நடத்திய பாசப் போராட்டத்தை நினைத்து பலரும் வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments