எனக்கு இந்தியா மீது ஈர்ப்பு இருப்பதற்கு இதுதான் காரணம்… ஒபாமாவின் சுவாரசிய அனுபவம்!!!

 

அமெரிக்க முன்னாள் அதிபர் பாரக் ஒபாமா தான் எழுதிய A promised land புத்தகத்தை தற்போது உலகம் முழுவதும் பல இடங்களில் வெளியிட்டு வருகிறார். அந்தப் புத்தகத்தில் தான் சந்தித்த உலகத் தலைவர்கள், அரசியல் நிலைமைகள், தான் கடந்து வந்த பாதை, அனுபவம், தற்போதைய தொற்றுச் சூழல் எனப் பல நிலவரங்களையும் குறிப்பிட்டு எழுதி இருக்கிறார். அதில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி குறித்து ஒபாமா வெளியிட்ட கருத்து இந்தியாவில் கடும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அதேபோல ஒபாமா தன்னுடைய சிறிய வயதில் இராமாயணத்தையும் மகாபாரதத்தையும் கேட்டு வளர்ந்த தனது அனுபவத்தைப் பற்றியும் இந்தியா மீது தனக்கு ஏற்பட்ட ஈர்ப்பை குறித்தும் எழுதி இருக்கிறார். அந்தக் கருத்து தற்போது கடும் வைரலாகி வருகிறது. இந்தோனேசியாவில் தன்னுடைய குழந்தைப் பருவத்தை கழித்ததாகத் தெரிவித்து உள்ள ஒபாமா புகழ்பெற்ற காவியங்களான ராமாயணத்தையும் மகாபாரதத்தையும் தான் கேட்டு வளர்ந்ததாகத் தெரிவித்து உள்ளார். இதனால் இந்தியா எப்போதும் தனக்கு ஒரு சிறப்பம்சம் பொருந்திய நாடாகவே இருந்துள்ளது எனவும் அவர் குறிப்பிட்டு உள்ளார்.

“இந்தோனேசியாவில் எனது குழந்தைப் பருவத்தின் ஒரு பகுதியை ராமாயணம் மற்றும் மகாபாரதத்தின் இந்து காவிய கதைகளைக் கேட்டு கழித்தேன். கிழக்கிந்திய நாடுகளின் மதங்களில் எனக்கு அதிக ஆர்வம் இருந்தது. பாகிஸ்தான் மற்றும் இந்தியாவை சேர்ந்த எனது நண்பர்கள் எனக்கு பருப்பு வகைகள், கீமா ஆகிய உணவுகளை சமைக்கவும் பாலிவுட் படங்கள் பார்க்கவும் கற்றுக் கொடுத்தார்கள். இவை அனைத்தின் காரணமாகவும் இந்தியா மீதான எனது ஈர்ப்பு அதிகரித்து இருக்கலாம்” என ஒபாமா எழுதியுள்ளார்.

மேலும் உலக மக்கள் தொகையில் ஆறில் ஒரு பங்கு மக்கள் இந்தியாவில் இருக்கிறார்கள். அதோடு பழமையான 2 ஆயிரம் இனக்குழுக்கள் அங்கு வாழ்கிறார்கள். ஒரே இடத்தில் இருந்து கொண்டு 700 க்கும் மேற்பட்ட மொழிகளை மக்கள் இயல்பாக பேசி வருகிறார்கள். இதெல்லாம் எனக்கு வியப்பாக இருக்கிறது. அதைத்தவிர, அரசு முறை பயணமாக கடந்த 2010 ஆம் ஆண்டு இந்தியாவிற்கு வருவதற்கு முன்பே புராணங்களில் வழியாக நான் இந்தியாவை பார்த்து இருக்கிறேன். அதனால் எனது சிறிய வயது முதலே இந்தியா மீது எனக்கு அதிக ஈர்ப்பு இருக்கிறது. அதற்கு ராமாயணம் போன்ற காவியங்களும் ஒரு காரணம் என்று ஒபாமா தெரிவித்து இருக்கிறார்.

மேலும் தனது புத்தகம் இளைஞர்களுக்கானது, உலகத்தை மீண்டும் அமைப்பதற்கான அழைப்பு, கடின உழைப்பு, உறுதிப்பாடு மற்றும் ஒரு பெரிய அளவிலான கற்பனையின் மூலம் இறுதியாக நம்மில் உள்ள சிறந்த அம்சங்கள் அனைத்தையும் நாம் ஒன்றிணைத்து ஒரு புதிய அமெரிக்காவை உண்டாக்க வேண்டும் என்று ஒபாமா கூறியுள்ளார். 768 பக்கங்களைக் கண்ட அவரது சுயசரிதையின் முதல் பக்கம் அச்சில் இல்லாமல் மஞ்சள் நிறத்திலான கையெழுத்து தாளாக இருக்கிறது. அதில், தனக்கு சுருக்கமாக எழுதத் தெரியாது என்று குறிப்பிட்டு உள்ளார்.

More News

அஜித் படத்தை பார்க்க பயந்தேன்: பாடகி சின்மயி

அஜித் நடித்த 'நேர் கொண்ட பார்வை' படத்தை பார்க்க பயந்தேன் என்றும் என்று பாடகி சின்மயி தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார் 

பாலியல் வழக்கு விசாரணையின்போது கதறியழுத பிரபல நடிகை: நீதிமன்றத்தில் பரபரப்பு!

பிரபல மலையாள நடிகை ஒருவரின் பாலியல் வழக்கு விசாரணை நடைபெற்று கொண்டிருந்தபோது நீதிமன்றத்தில் கதறி அழுததாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது

முதலமைச்சர் ஆகிறார் எஸ்.ஏ.சந்திரசேகர்: பரபரப்பு தகவல்

கடந்த சில நாட்களுக்கு முன்னர் தளபதி விஜய்யின் மக்கள் இயக்கம் பெயரில் திடீரென அரசியல் கட்சியை ஆரம்பித்துள்ளதாக எஸ்.ஏ. சந்திரசேகர் அறிவித்த செய்தி அனைத்து ஊடகங்களிலும் தலைப்புச் செய்தியாக இடம் பெற்றது

ஒன்றுக்கும் மேற்பட்டவர்களுடன் கள்ளக்காதல்: 35 வயது பெண் மர்மமான முறையில் கொலை!

ஒன்றுக்கும் மேற்பட்டவர்களுடன் கள்ளக்காதலில் இருந்த 35 வயது பெண் ஒருவர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு இருப்பது நெல்லை அருகே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

புது அனுபவத்திற்கு தயாரா? வைரலாகும் சூர்யாவின் வீடியோ!

சூர்யா நடித்த 'சூரரைப்போற்று' திரைப்படம் சமீபத்தில் ஓடிடியில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு சில எதிர்மறையான விமர்சனங்கள் இந்த படத்திற்கு வந்தாலும் பெரும்பாலானோர்