ஆபாச நடிகையான மகள்: வாழ்த்து தெரிவித்த உலகப்புகழ் பெற்ற பிரபல இயக்குனர்!
Send us your feedback to audioarticles@vaarta.com
உலகப் புகழ்பெற்ற இயக்குனர் ஒருவர் தனது மகள் ஆபாச நடிகையாக விருப்பம் தெரிவித்ததற்கு வாழ்த்து தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
‘ஜூராசிக் பார்க்’ உள்ளிட்ட உலகப் புகழ்பெற்ற படங்களை இயக்கியவர் ஸ்டீபன் ஸ்பீல்பெர்க். இவரது வளர்ப்பு மகளான மைக்கேலா என்பவர் ஆபாச வீடியோக்களை தயாரித்து அதில் நடிக்கவும் எடுத்த முடிவிற்கு ஸ்பீல்பர்க் மற்றும் அவரது மனைவி வாழ்த்து தெரிவித்துள்ளனர்
இதுகுறித்து ஊடகம் ஒன்றுக்கு மைக்கேலா அளித்த பேட்டியின்போது ’என் பெற்றோர்கள் தான் எனது பாதுகாப்புக்கு உறுதுணை ஆனவர்கள். அவர்கள்தான் இந்த தொழிலை நான் தேர்வு செய்ததற்கு ஆதரவாக இருந்து வாழ்த்து தெரிவித்தனர்.
நான் எப்போதும் பாலியல் தொடர்பான விஷயத்தில் விருப்பமாக இருப்பேன். முதலில் எனக்கு இது சிக்கலை ஏற்படுத்தினாலும் இந்த உடலை வைத்து பணம் சம்பாதிப்பதில் எந்த தவறும் இல்லை என்ற முடிவை நான் எடுத்தேன். இது குறித்து எனது பெற்றோர்களிடம் நான் கூறியபோது அவர்கள் எனது முடிவுக்கு வருத்தப்படவில்லை மாறாக எனக்கு வாழ்த்து தெரிவித்தனர். ஆபாச திரைப்பட நடிகையாக மாறியது மட்டுமன்றி அந்த படங்களை நானே தயாரிக்க உள்ளேன் என்பதை பெருமையுடன் கூறிக் கொள்கிறேன் என்று மைக்க்லேலா கூறியுள்ளார்
ஸ்டீபன் ஸ்பீல்பெர்க் மற்றும் அவரது மனைவி கேட் தம்பதியினர் மைக்கேலா தவிர இன்னும் 5 குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Megha
Contact at support@indiaglitz.com
Comments