கணிதத்தில் 2 மார்க் மட்டுமே வாங்கிய 10ஆம் வகுப்பு மாணவி: மறுகூட்டலில் கிடைத்த இன்ப அதிர்ச்சி

  • IndiaGlitz, [Saturday,August 08 2020]

தமிழகம் உள்பட அனைத்து மாநிலங்களிலும் பத்தாம் வகுப்பு தேர்வின் முடிவுகள் கடந்த சில நாட்களாக அறிவிக்கப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் வரும் திங்களன்று 10ஆம் வகுப்பு முடிவுகள் வெளியாகவுள்ளன.

இந்த நிலையில் சமீபத்தில் ஹரியானா மாநிலத்தில் 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இந்த தேர்வை எழுதிய சுப்ரியா என்ற மாணவி கணிதத்தில் இரண்டு மதிப்பெண்கள் மட்டுமே பெற்றிருந்ததாக அவரது மதிப்பெண் பட்டியலில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதை பார்த்து அந்த மாணவி அதிர்ச்சி அடைந்தார்.

தான் கணித தேர்வை மிகவும் நன்றாக எழுதியிருந்ததாகவும், 100க்கு 100 மதிப்பெண்கள் வரும் என்று எதிர்பார்த்த தனக்கு தன்னுடைய மதிப்பெண் பட்டியலில் கணிதத்தில் இரண்டு மதிப்பெண்கள் மட்டுமே இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

இதனையடுத்து சுப்ரியா தனது பெற்றோர்களின் அறிவுறுத்தலின்படி மறுகூட்டலுக்கு விண்ணப்பித்தார். மறுகூட்டலில் அவர் எதிர்பார்த்தபடியே கணிதத்தில் அவருக்கு 100 மதிப்பெண்கள் கிடைத்தது. இதனால் சுப்ரியா மகிழ்ச்சி அடைந்துள்ளார். கணிதம் மட்டுமின்றி அனைத்து பாடங்களிலும் சுப்ரியா 90க்கும் மேல் மதிப்பெண்களை எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

மாணவி சுப்ரியா பார்வையற்ற மாற்றுத்திறனாளி என்பதால் அவருடைய பேப்பரை பார்க்காமலேயே வெறும் இரண்டு மதிப்பெண்கள் மட்டும் அளித்தது விசாரணையில் தெரிய வந்ததாகவும், இதுகுறித்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இதுபோன்ற வேறு ஒரு மாற்றுத்திறனாளிக்கு இதுபோன்ற நிலைமை வரக்கூடாது என்றும் சுப்ரியாவின் தந்தை கூறியுள்ளார்.

More News

கருப்பு பெட்டி கிடைத்தது: கேரள விமான விபத்திற்கான காரணம் என்ன?

கோழிக்கோட்டில் நேற்று ஏர் இந்தியா விமானம் ஒன்று ரன்வேயில் தரையிறங்கும் போது விபத்துக்குள்ளாகி அதில் பயணம் செய்த 19 பேர் பலியாகிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டி-20 உலகக்கோப்பை போட்டிகள்!!! ஐசிசி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!!

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் டி-20 உலகக்கோப்பை குறித்தான பல அறிவிப்புகளை வெளியிட்டு இருக்கிறது.

50 ஆயிரம் கோடி முதலீட்டில் புதிய EV தொழிற்பூங்கா!!! 15 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு!!! முதல்வரின் அடுத்த அதிரடி!!!

நாட்டிலேயே முதல்முறையாக தமிழகத்தில் மின்சார வாகன உற்பத்தி (EV) பூங்கா அமைக்கப் படவுள்ளது.

மும்பை வெள்ளம்: 5 மணி நேரம் தண்ணீரில் நின்று பொதுமக்களை காப்பாற்றிய பெண் துப்புரவு பணியாளர்

மும்பையில் ஏற்கனவே கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து, உயிரிழப்புகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வெள்ளப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கொரோனா, வெள்ளம், விமான விபத்தை அடுத்து நிலநடுக்கம்: என்னதான் நடக்குது 2020ல்?

இந்த 2020 ஆம் ஆண்டு மனித குலத்தின் அழிவு ஆண்டாக கருதப்படுகிறது. இந்த வருடத்தின் தொடக்கத்தில் இருந்தே கொரோனா வைரஸ் சீனாவிலிருந்து உலகம் முழுவதும்