அன்னை இல்லத்தில் இணைந்த அஜித்-விஜய் ரசிகர்கள்

  • IndiaGlitz, [Wednesday,May 02 2018]

சமூக வலைத்தளங்களில் அஜித்-விஜய் ரசிகர்கள் மோதிக்கொள்வது மட்டும்தான் பலருக்கு தெரியும். ஆனால் அஜித் பிறந்தநாளை விஜய் ரசிகர்களும் கொண்டாடுவது, அதேபோல் விஜய் பிறந்தநாளை அஜித் ரசிகர்களும் கொண்டாடுவது போன்ற ஒருசில இடங்களில் நடந்து வருகின்றது.

இந்த நிலையில் நேற்றைய அஜித் பிறந்த நாளின்போது தளபதி விஜய்யின் ரசிகர்கள், அஜித் ரசிகர்களுடன் இணைந்து சென்னை மயிலாப்பூரில் உள்ள முதியவர்கள் காப்பகமான அன்னை இல்லம் சென்று அங்குள்ள முதியவர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. நடிகர் விஜய் ஆன்லைன் வெல்ஃபேர் கிளப், அஜித் ரசிகர்களுடன் இணைந்து நடத்திய இந்த நிகழ்ச்சிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

அஜித், விஜய் இருவரும் சிறந்த நண்பர்களாக இருந்து வருவது போன்று அவர்களுடைய ரசிகர்களும் அதேபோல் ஒற்றுமையாக இருந்து

இதுபோன்ற இன்னும் பல நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாக உள்ளது.

More News

அமெரிக்காவில் நடனத்தில் இணைந்த நயன்தாரா விக்னேஷ் சிவன் ஜோடி

அமெரிக்காவின் கலிபோர்னியா நகரில் கடந்த 1999ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்று வரும் இசை திருவிழாதான் Coachella என்ற இசை நிகழ்ச்சி. இந்த ஆண்டும் இந்த விழா மிகச்சிறப்பாக நடைபெற்று வருகிறது.

நெட்டிசன்கள் அர்ச்சனை எதிரொலி: முதல்வரின் அர்ச்சனை விளம்பரம் நீக்கம்

நெட்டிசன்கள் இணையதளங்களில் தொடர்ந்து பதிவு செய்த அர்ச்சனைகள் காரணமாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அர்ச்சனை செய்யும் விளம்பரம் நீக்கப்பட்டுள்ளது.

அஜித்தின் சிறப்பு வாய்ந்த ஸ்பெஷல் திரைப்படங்கள்

தல அஜித் என்ற இந்த ஒற்றை வார்த்தை தான் அஜித் ரசிகர்களுக்கு தாரக மந்திரம். அஜித்த

நள்ளிரவில் சென்னையை வலம் வந்த 'தளபதி 62' குழுவினர்

விஜய் நடித்து வரும் 'தளபதி 62' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருவது தெரிந்ததே. சமீபத்தில் கூட விஜய் மற்றும் 100 மாணவர்கள் இரவில் சென்னையை பைக்கில் செல்லும் காட்சி படமாக்கப்பட்டது.

விஜய் மில்டனின் 'கோலி சோடா 2' ரிலீஸ் தேதி அறிவிப்பு

பிரபல இயக்குனர் மற்றும் ஒளிப்பதிவாளர் இயக்கிய 'கோலி சோடா' திரைப்படம் கடந்த 2014ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் ஆகியது. ரூ.2 கோடியில் தயாரான