போட்டியாளர் ஒருவருக்கு ஸ்பெஷல் பவர்: அர்ச்சனா தப்பிச்சுடுவாரா?
- IndiaGlitz, [Tuesday,December 15 2020]
பிக்பாஸ் வீட்டில் இன்று போட்டியாளர்களுக்கு கொடுக்கப்படும் புதிய டாஸ்க்கில் போட்டியாளர் கோழி மற்றும் நரியாக மாறுகின்றனர். இந்த டாஸ்க்கின் படி கோழிகள் தங்களுடைய தங்க முட்டைகளை நரிகளின் கை படாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும் முட்டைகளை தொட வரும் நரியின் வாலை கோழிகள் பிடித்து விட்டால் அந்த நரி அந்த சுற்றில் இருந்து வெளியேறி விடும் என்றும், முட்டைகளை தொடுவது, வாலை பிடிப்பது ஆகியவற்றுக்கு பிக்பாஸ் கரன்ஸி கொடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இறுதியில் எந்த நபரிடம் அதிக பிக்பாஸ் கரன்சி உள்ளதோ அந்த நபருக்கு ஸ்பெஷல் பவர் கொடுக்கப்படும் என இந்த டாஸ்க்கில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த டாஸ்க்கில் ஸ்பெஷல் பவர் கிடைக்கும் நபர் தன்னை நாமினேஷன் இருந்து விடுவித்துக் கொள்ள வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.
இதனால் இந்த டாஸ்க்கில் அர்ச்சனா அல்லது ரியோ அந்த ஸ்பெஷல் பவரை பெற்று நாமினேஷனில் இருந்து அவர்கள் இருவரில் ஒருவர் இந்த வாரம் தப்பித்து விடுவார்களா? என்ற கேள்வியை நெட்டிசன்கள் எழுப்பியுள்ளனர்.
அதுமட்டுமின்றி இது பிஸிக்கல் டாஸ்க் என்பதால் இரு தரப்பினருக்கும் புதிய மனிதா டாஸ்க் போலவே இந்த டாஸ்க்கிலும் பிரச்சனை வர வாய்ப்பிருக்கிறது. மேலும் கடந்த டாஸ்க் போலவே இந்த டாஸ்க்கிலும் பாலாஜி மற்றும் அர்ச்சனா எதிரெதிர் அணியில் உள்ளனர் என்பதால் இன்றைய நிகழ்ச்சியில் தரமான சம்பவம் இருக்கவும் வாய்ப்புள்ளது.
#Day72 #Promo1 of #BiggBossTamil #பிக்பாஸ் - தினமும் இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason4 #BiggBossTamil4 #VijayTelevision pic.twitter.com/8oYSoLt59k
— Vijay Television (@vijaytelevision) December 15, 2020