சமஸ்கிருதம் பேசினால் சர்க்கரை நோய் வராது, கொழுப்பும் குறையும் - கணேஷ் சிங் MP (பாஜக).

சமஸ்கிருதம் பேசினால் நரம்பு மண்டலம் சீராகும், உடலில் சக்கரை அளவும், கொழுப்பும் அளவும் குறைந்து வரும் என பா.ஜ.க எம்.பி. கணேஷ் சிங் மக்களவையில் சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார்.

மக்களவையில் சமஸ்கிருதப் பல்கலைக்கழகங்களின் மசோதா நேற்று தாக்கல் செய்யப்பட்டது. இதன் விவாதத்தில் பா.ஜ.க எம்.பி. கணேஷ் சிங் பேசினார். அப்போது, “நாட்டு மக்கள் தினமும் சமஸ்கிருதம் பேசிவந்தால், நரம்பு மண்டலம் சீராகும், உடலில் சக்கரை அளவும், கொழுப்பும் அளவும் குறைந்து கட்டுக்குள் வரும்” என்றார்.

மேலும் பேசிய அவர், சமஸ்கிருத மொழியை கம்ப்யூட்டர் புரோகிராமில் வடிவமைத்தால் கணினிக்கு எந்தவித பிரச்னையும் ஏற்படாது எனஅமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா கூறியுள்ளதாக தெரிவித்தார்.அதுமட்டுமின்றி, இஸ்லாமிய மொழிகள் உள்பட உலகில் பேசப்படும் 97% மொழிகள் சமஸ்கிருதத்தை கொண்டு உருவாக்கப்பட்டதாகவும் அதிலிருந்து வந்ததாகவும் கூறியுள்ளனர்.

பா.ஜ.க எம்.பி.யின் இத்தகைய பேச்சுக்கு தி.மு.க., காங்கிரஸ், இடதுசாரி கட்சி எம்.பி.க்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். மேலும், பின்னர் நடைபெற்ற விவாதத்தில் கலந்துக்கொண்டு பேசிய தி.மு.க., எம்.பி. ஆ.ராசா, “சமஸ்கிருத மொழியில் இருந்து தமிழ் வரவில்லை. குறிப்பாக திராவிட மொழிகளில் தமிழ் 4,500 ஆண்டுகளுக்கும் மேலான பழமைமிக்கது. இதற்கு பல்வேறு சான்றுகள் உள்ளன. ஆனால், சமஸ்கிருதம் 2,500 ஆண்டுகள் மட்டுமே பழமையானது. மேலும், பா.ஜ.க எம்.பி.க்கள் சமஸ்கிருதத்தின் மூலம் அறிவியல் கல்வி குறித்து பேசுவது வியப்பளிக்கிறது” என அவர் தெரிவித்தார்.

முன்னதாக பா.ஜ.கவினர் சமஸ்கிருதமே உலகின் ஆதி மொழி என பேசிவரும் நிலையில், தற்போது பா.ஜ.க எம்.பி. இதுபோல பேசியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

More News

உதயநிதி ஸ்டாலின் கைது..!

குடியுரிமை சட்ட திருத்தத்தை கண்டித்து, சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் சாலைமறியலில் ஈடுபட்ட திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்

இரண்டாவது கணவனை பிரிந்து முதல் கணவனின் மச்சினனுடன் 'தொழில்' செய்த சென்னை இளம்பெண் கைது!

முதல் கணவரை விவாகரத்து செய்துவிட்டு இரண்டாவது கணவருடனும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதை அடுத்து முதல் கணவரின் மச்சினனுடன் நட்புடன் பழகி வரும் சென்னையை சேர்ந்த பெண் ஒருவர்

ரயில் தண்டவாளத்தில் குடும்பத்துடன் அமர்ந்து தற்கொலை: திண்டுக்கல் அருகே பரபரப்பு!

ரயில் தண்டவாளத்தில் அமர்ந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திண்டுக்கல் அருகே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

அம்மாவின் கனவை நனவாக்குவேன்: மறைந்த நடிகையின் மகள் பேட்டி

இயக்குனர் பாக்யராஜ் இயக்கி நடித்த 'சின்ன வீடு' என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி அதன் பின்னர் பல திரைப்படங்களில் நடித்தவர் நடிகை கல்பனா. இவர் பிரபல நடிகை ஊர்வசியின் சகோதரி என்பது குறிப்பிடத்தக்கது 

'பிகில்' படம் குறித்து அர்ச்சனா அறிவித்துள்ள அசத்தலான அறிவிப்பு

தளபதி விஜய் நடிப்பில், இயக்குனர் அட்லீயின் இயக்கத்தில், இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான் இசையில் ஏஜிஎஸ் நிறுவனத்தின் பிரமாண்ட தயாரிப்பில் உருவான பிகில் திரைப்படம் கடந்த தீபாவளி அன்று வெளியாகி