அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் உடல்நலக் குறைவால் காலமானார்!
Send us your feedback to audioarticles@vaarta.com
அதிமுக அவைத்தலைவரும் முன்னாள் அமைச்சருமான மதுசூதனன் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 80.
கடந்த ஜுலை 18 ஆம் தேதி மூச்சுத் திணறல் ஏற்பட்டு சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் கடந்த சில தினங்களாக அவரது உடல்நிலை மோசம் அடைந்து வருகிறது எனத் தகவல்கள் வெளியாகி வந்தது. தற்போது அவர் இறந்துவிட்டதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி இருக்கிறது. இவரது இறப்புக்கு அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
14 வயதில் எம்ஜிஆர் ரசிகர் மன்றத்தைத் துவங்கிய இவர் பின்னாளில் வடசென்னையில் மிகப்பெரும் அரசியல்வாதியாக உருவெடுத்தார். 1991 இல் ஆர்.கே.நகர் தொகுதியில் வெற்றிப்பெற்று ஜெயலலிதாவின் முதல் அமைச்சரவையிலேயே கைத்தறி அமைச்சராகப் பதவி வகித்தவர்.
கடந்த 2007 ஆம் ஆண்டு முதல் அதிமுகவில் அவைத் தலைவராக பதவி வகித்துவந்தார். எம்ஜிஆர் மறைவிற்கு பிறகு ஜெயலலிதா ஆட்சியில் மிக நீண்டகாலம் அதிமுகவின் அவைத்தலைவராக பொறுப்பு வகித்தவர். சமீபத்தில் அதிமுக கட்சிக்குள் வெடித்த சர்ச்சையால் இவரிடமே கட்சியின் சின்னம் மற்றும் பெயரை தேர்தல் ஆணையம் வழங்கி இருந்தது.
முன்னதாக மதுசூதனன் இருக்கும் வரை அவர்தான் அதிமுகவின் அவைத்தலைவர் என்று மறைந்த முதல்வர் செல்வி ஜெயலலிதா குறிப்பிட்டு இருந்தார். அந்த வார்த்தை அவருடைய இறுதிக்காலம் வரை பின்பற்றப்பட்டு இருக்கிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout