குண்டுக்கட்டாக வெளியேற்றப்பட்ட திமுக எம்.எல்.ஏக்கள் யார் யார்?

  • IndiaGlitz, [Saturday,February 18 2017]


சபாநாயகரின் உத்தரவை அடுத்து 88 திமுக எம்.எல்.ஏக்களையும் வெளியேற்றும் முயற்சியில் சபைக்காவலர்கள் தற்போது ஈடுபட்டு வருகின்றனர்.
ஆனால் 89 திமுக உறுப்பினர்களை வெளியேற்றும் அளவுக்கு சபைக்காவலர்களின் எண்ணிக்கை இல்லை. இருப்பினும் காவலர்கள் திமுக எம்.எல்.ஏக்களை வெளியேற்றும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுவரை திமுக உறுப்பினர்கள் மா.சுப்பிரமணியன், நந்தகுமார், பனமரத்துப்பட்டி ராஜேந்திரன், சுந்தர், எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், தளி எம்எல்ஏ பிரகாஷ் ஆகியோர் குண்டுக்கட்டாக பேரவையில் இருந்து வெளியேற்றப்பட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
காவலர்களை கண்டித்து பேரவைக்குள் திமுக எம்.எல்.ஏக்கள் தர்ணாவில் ஈடுபட்டு இருப்பதால் மீதி உறுப்பினர்களை வெளியேற்றும் முயற்சியில் காவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.