எஸ்பிபிக்கு கொரோனா நெகட்டிவ்: கிரிக்கெட் பார்க்கின்றார்: எஸ்பிபி மகன் தகவல்
- IndiaGlitz, [Monday,September 07 2020]
பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்கள் கடந்த சில வாரங்களாக கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலை கடந்த சில நாட்களாக சீராக இருப்பதாகவும் அமெரிக்கா, பிரிட்டன் மருத்துவர்களின் ஆலோசனையின்படி அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்தனர்
இந்த நிலையில் இன்று ஒரு நல்ல செய்தியை சொல்வதாக எஸ்பிபி சரண் அவர்கள் ஏற்கனவே தெரிவித்திருந்த நிலையில் சற்று முன் அவர் தனது சமூக வலைத்தளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் எஸ்பிபி அவர்களுக்கு கொரானோ நெகட்டிவ் ரிசல்ட் வந்துள்ளது என்ற மகிழ்ச்சியான செய்தியை தெரிவித்தார்
மேலும் எஸ்பிபி அவர்கள் ஐபேட் மூலம் கிரிக்கெட் மற்றும் டென்னிஸ் விளையாட்டைப் பார்த்து வருகிறார் என்றும் தற்போது அவருடைய உடல்நிலை தற்போது மெல்ல மெல்ல குணமாகி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இருப்பினும் அவர் தற்போது வென்டிலேட்டர் மற்றும் எக்மோ கருவியின் உதவியால் தான் சிகிச்சை பெற்று வருகிறார் என்றும் எஸ்பிபி சரண் தெரிவித்துள்ளார். மீண்டும் ஒருமுறை தனது தந்தைக்காக பிரார்த்தனை செய்து வரும் அனைவருக்கும் தனது நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும் எஸ்பிபி சரண் தெரிவித்துள்ளார்.
கொரோனாவில் இருந்து எஸ்பிபி அவர்கள் மீண்டுவிட்டதாக வெளிவந்துள்ள செய்தி அவரது கோடிக்கணக்கான இசை ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது
View this post on InstagramA post shared by S. P. Charan/Producer/Director (@spbcharan) on Sep 7, 2020 at 4:08am PDT