சென்னையின் முக்கிய பகுதிக்கு எஸ்பிபி நகர் என்ற பெயர்.. முதல்வர் அலுவலகத்தில் மனு..!
Send us your feedback to audioarticles@vaarta.com
சென்னையில் உள்ள முக்கிய பகுதிக்கு மறைந்த பின்னணி பாடகர் எஸ். பி. பாலசுப்ரமணியம் நகர் என்று பெயர் வைக்க முதல்வர் அலுவலகத்தில் எஸ்பிபி சரண் மனு அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் உள்ளிட்ட பல தென்னிந்திய மொழிகளிலும், வட இந்திய மொழிகளிலும் பிரபலமான பாடகராக இருந்தவர் எஸ். பி. பாலசுப்ரமணியம். இவர் 2020 ஆம் ஆண்டு கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த நிலையில், எஸ்பிபி வாழ்ந்த சென்னை காம்தார் நகர் பகுதியில் எஸ். பி. பாலசுப்ரமணியம் நகர் என்ற பெயரை கோரி, அவரது மகன் எஸ்பிபி சரண் முதல்வர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்துள்ளார்.
சென்னை நுங்கம்பாக்கம் அருகே எஸ்பிபி வாழ்ந்த இந்த பகுதி அவரது பெயரில் மாற்றப்படுவது குறித்து தமிழ்நாடு அரசு பரிசீலனை செய்து விரைவில் இது குறித்து அறிவிப்பு வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Megha
Contact at support@indiaglitz.com