சென்னையின் முக்கிய பகுதிக்கு எஸ்பிபி நகர் என்ற பெயர்.. முதல்வர் அலுவலகத்தில் மனு..!

  • IndiaGlitz, [Monday,September 23 2024]

சென்னையில் உள்ள முக்கிய பகுதிக்கு மறைந்த பின்னணி பாடகர் எஸ். பி. பாலசுப்ரமணியம் நகர் என்று பெயர் வைக்க முதல்வர் அலுவலகத்தில் எஸ்பிபி சரண் மனு அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் உள்ளிட்ட பல தென்னிந்திய மொழிகளிலும், வட இந்திய மொழிகளிலும் பிரபலமான பாடகராக இருந்தவர் எஸ். பி. பாலசுப்ரமணியம். இவர் 2020 ஆம் ஆண்டு கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்த நிலையில், எஸ்பிபி வாழ்ந்த சென்னை காம்தார் நகர் பகுதியில் எஸ். பி. பாலசுப்ரமணியம் நகர் என்ற பெயரை கோரி, அவரது மகன் எஸ்பிபி சரண் முதல்வர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்துள்ளார்.

சென்னை நுங்கம்பாக்கம் அருகே எஸ்பிபி வாழ்ந்த இந்த பகுதி அவரது பெயரில் மாற்றப்படுவது குறித்து தமிழ்நாடு அரசு பரிசீலனை செய்து விரைவில் இது குறித்து அறிவிப்பு வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

தமிழ்நாட்டு மக்களிடம் கெஞ்சி கேட்டுக்கொள்கிறேன்: செல்வராகவன் வைரல் வீடியோ..

இயக்குனர் செல்வராகவன் அவ்வப்போது முக்கிய அறிவுரைகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டு வருகிறார். சற்று முன்னர், தமிழ்நாட்டு மக்களிடம் “கெஞ்சி கேட்டுக்கொள்கிறேன்”

ஒன்றாக வளர்கிறோம்.. மகனின் க்யூட் புகைப்படத்தை வெளியிட்ட அமலாபால்..!

நடிகை அமலா பால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மகனுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவு செய்து, அதில் "ஒன்றாக வளர்கிறோம்" என்ற கேப்ஷனையும் பதிவிட்டுள்ளார்.

ஆஸ்கார் பரிந்துரைக்கு 6 தமிழ்ப்படங்கள்... எந்தப் படமும் தேர்வாகவில்லை... தேர்வான படம் எது?

அடுத்த ஆண்டு ஆஸ்கார் விருதுக்காக 6 தமிழ் படங்கள் உள்பட மொத்தம் 29 திரைப்படங்கள் இந்திய திரைப்பட கூட்டமைப்பு பரிந்துரை செய்து அனுப்பிய நிலையில், அதிலிருந்து ஒரு படம்

இதோடு நிறுத்தி கொள்ளுங்கள்.. பிரபல நடிகருடன் வதந்தி கிளப்பியதால் ஆவேசமான சிம்ரன்..!

பிரபல நடிகருடன் இணைத்து நடிகை சிம்ரனை யூடியூப் சேனலில் வதந்தி கிளம்பியதை அடுத்து, நடிகை சிம்ரன் ஆவேசமாக இதுகுறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

அட்லியால் தள்ளிப்போகுமா 'வாடிவாசல்'.. என்னதான் நடக்குது?

சூர்யா நடிப்பில், வெற்றிமாறன் இயக்கத்தில் 'வாடிவாசல்' என்ற திரைப்படம் உருவாக இருப்பதாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. இருந்தாலும்,