குரு யேசுதாசுக்கு செலுத்தும் காணிக்கைதான் இந்த பாதபூஜை. எஸ்பி பாலசுப்பிரமணியம்

  • IndiaGlitz, [Saturday,December 31 2016]

பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் திரையுலகிற்கு காலடி எடுத்து வைத்து ஐம்பது ஆண்டுகள் நிறைவு பெறுகின்றது. திரையுலக இசைக்காகவே தனது வாழ்நாளின் பெரும்பகுதியை அர்ப்பணம் செய்த எஸ்பிபி, தனது குருவாக தனது சக பாடகர் யேசுதாஸ் அவர்களை குறிப்பிட்டுள்ளார். அதுமட்டுமின்றி எஸ்.பி.பி குடும்பத்தினர், யேசுதாஸ் மற்றும் அவருடைய மனைவிக்கு பாத பூஜை செய்தனர்.

இதன்பின்னர் இந்த நிகழ்ச்சியில் மிக உருக்கமாக எஸ்பிபி பேசியதாவது:

நான் பாட ஆரம்பித்து 50 ஆண்டுகள் ஆகிவிட்டது என்பதை என்னால் நம்பவே முடியவில்லை. 50 வருடங்கள் என்பது சாதனை அல்ல. ஜேசுதாஸ் அண்ணா 55 வருடங்களாகப் பாடி வருகிறார். ஜானகி, சுசிலா, லதா மங்கேஷ்கர் போன்றவர்கள் 75 வருடங்களுக்கு மேல் பாடி வருகிறார்கள்.

என் மனதுக்கு மிகவும் பிடித்த பாடகர் முஹம்மது ரஃபி. அவருக்குப் பிறகு எனக்கு மிகவும் நெருக்கம் என் அண்ணா ஸ்ரீயேசுதாஸ் தான். அவருடைய ஆசிர்வாதம் வாங்க வேண்டும் என்று எனக்கு ரொம்ப ஆசை. என் குரு யேசுதாஸ். அவருக்கு காணிக்கை செலுத்தும்விதமாக நான் பாத பூஜை செய்தேன். அவர் ஒரு ரிஷி, யோகி. அவருக்கு மாதிரி ஒரு குரல் கிடைப்பது பூர்வஜென்ம புண்ணியம்.

நான் முறையாக சங்கீதம் கற்றுக்கொள்ளாமல், சினிமாவுக்கு பாட வந்தேன். என் தாய்மொழி இசை. 16 அல்லது 17 வயது இருக்கும்போது, ஒரு மேடை கச்சேரியில் பாடினேன். அப்போது என் பாடலை கேட்டு, ஜானகி அம்மா, நீ சினிமாவுக்கு வந்தால் பெரிய பாடகராகிவிடுவாய், முயற்சி செய்'' என்று சொன்னார். அப்படித் தான் சினிமாவில் முயற்சி செய்து பாடகரானேன்.

அதனைத் தொடர்ந்து என்னை விட பல சீனியர் பாடகர்கள் நான் வளர்வதற்கு பெரும் உறுதுணையாக இருந்தார்கள். அவர்களிடமிருந்து நிறைய கற்றுக் கொண்டேன். இப்போதும், எனக்கு மைக் முன்னாடி எப்படிப் பாடுகிறேன் என்று கேட்டால் தெரியாது. ரஜினி, கமல், அனில் கபூர் உள்ளிட்ட பலருக்கு தெலுங்கில் டப்பிங் பேசியிருக்கிறேன். எனக்காக பலரும் வேடங்களை உருவாக்கிக் கொடுத்தார்கள். சில நல்ல கதாபாத்திரங்களில் நடித்தும் இருக்கிறேன்.

நிறைய தயாரிப்பாளர்கள், நான்தான் பாட வேண்டும் என பாடல்கள் கொடுத்தவர்கள், இசையமைப்பாளர்கள், பாடலாசிரியர்கள், இசைக்கருவி வாசித்த எத்தனையோ நல்லவர்கள், பதிவு செய்தவர்கள், நன்றாக நடித்த நடிகர்கள் மற்றும் இசையைக் கேட்டு ரசித்தவர்கள் என அனைவருக்கும் நன்றி'

இவ்வாறு எஸ்பி பாலசுப்பிரமணியம் பேசினார்.

More News

சசிகலாவுக்கு பொதுச்செயலாளர் பதவியா? ஜெ. நினைவிடத்தில் விஷம் குடித்த அதிமுக தொண்டர்

அதிமுகவின் அடுத்த பொதுச்செயலாளராக பொதுக்குழு உறுப்பினர்களால் ஒருமனதாக சசிகலா தேர்வு செய்யப்பட்ட போதிலும்...

சசிகலாவின் முதல் பேச்சு : ஜெயலலிதா காட்டிய வழியில் ராணுவ கட்டுப்பாட்டுடன் செயல்படுவோம்

சமீபத்தில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் ஒருமனதாக பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட சசிகலா...

சசிகலாவுக்கு வழங்கப்பட்ட புதிய புரட்சி பட்டம்

புரட்சித்தலைவர் என்ற பட்டம் எம்.ஜி.ஆருக்கும், புரட்சி தலைவி என்ற பட்டம் ஜெயலலிதாவுக்கும்...

'எனை நோக்கி பாயும் தோட்டா: தாமரையின் பாடல் வரிகள்

தனுஷ் நடிப்பில் கவுதம் மேனன் இயக்கி வரும் 'எனை நோக்கி பாயும் தோட்டா' படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது...

இளையதளபதியுடன் மீண்டும் இணையும் எஸ்.ஜே.சூர்யா?

இளையதளபதி விஜய் நடிப்பில் எஸ்.ஜே.சூர்யா இயக்கிய குஷி திரைப்படம் கடந்த 2000ஆம் ஆண்டு வெளிவந்து நல்ல வெற்றியை பெற்றது...